Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25வது ஆண்டில் 'பாட்ஷா'

12 ஜன, 2019 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Baasha-enters-in-25th-year

ரஜினிகாந்த் படம் என்றாலே இன்றைய இளம் தலைமுறைக்கும் உடனே ஞாபகத்திற்கு வரும் படம் 'பாட்ஷா' மட்டுமாகத்தான் இருக்கும். அந்தப் படத்திற்கு முன்பாகவும், பின்னரும் எத்தனையோ படங்களில் ரஜினிகாந்த் நடித்துவிட்டார். ஆனால், ஒரு ரஜினி படம் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த அம்சங்கள் அத்தனையும் ஒருசேர அமைந்த ஒரே படம் என்றால் அது 'பாட்ஷா' தான்.

இத்தனைக்கும் 'ஹம்' ஹிந்திப் படத்தின் ரீமேக்தான் 'பாட்ஷா' படம். ஆனாலும், தமிழில் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்ட கதை, கதாபாத்திரம் போன்றுதான் அந்தப் படம் இருக்கும்.

1995ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளிவந்த 'பாட்ஷா' படம் இன்று 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையில், ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஆனந்தராஜ், சரண்ராஜ், ஜனகராஜ், கிட்டி, சசிகுமார், செண்பகா, யுவராணி, சத்யப்ரியா, விஜயகுமார், தேவன் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் ஒவ்வொருடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தது.

ரஜினியுடன் கூடவே இருக்கும் தளபதி தினேஷ், மகாநதி சங்கர், அந்த சிங் என அவர்கள் கூட ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்கள். 'பேட்ட' வரை ரஜினிகாந்த் வந்துவிட்டாலும் 'பாட்ஷா'வை மிஞ்சும் அளவிற்கு வேறொரு படத்தை எந்த ஒரு இயக்குனராலும், ரஜினிகாந்த்தை வைத்து கொடுக்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ரஜினி ரசிகர்களைக் கேட்டால் 'பாட்ஷா' என்றால் அது ஒரே 'பாட்ஷா'தான். அதற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை என்று சொல்வார்கள். ஒரு ஹீரோயிசம் படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கு காலத்திற்குமான ஒரு சிறந்த 'பாடம்' தான் 'பாட்ஷா' படம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கழுகு 2 - சகலாகலாவல்லி பாடல் வெளியீடுகழுகு 2 - சகலாகலாவல்லி பாடல் வெளியீடு அஜித்தை வைத்து சரித்திர படம் : சிவா அஜித்தை வைத்து சரித்திர படம் : சிவா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
13 ஜன, 2019 - 04:15 Report Abuse
Rajesh One Super Star.. One Baatsha!!!No ment for both..
Rate this:
12 ஜன, 2019 - 21:03 Report Abuse
கோகுல்,மதுரை பாட்ஷா என்ற பேர கேட்டாலே இப்ப கூட புல்லரிக்குது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in