நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்த கழுகு 2 படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. கடந்த 2012ல் வெளியான கழுகு முதல் பாகம் படத்தை இயக்கிய சத்யசிவாதான் கழுகு 2ன் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. படத்துக்கான போஸ்ட் புரொடொக்ஷன் வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், படம் சென்சாருக்குச் சென்று, யு சான்றிதழ் பெற்றிருக்கிறது.
இதற்கிடையில், படத்துக்கான முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. சகலாகலாவல்லி என துவங்கும் பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளது. கிருஷ்ணா, காளி வெங்கட் உடன் யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்டுள்ளார்.
பொதுவாக முதல்பாடலை லிரீக் வீடியோவாக வெளியிடுவார்கள். ஆனால் இந்தப்பாடலை வீடியோவாகவே வெளியிட்டுள்ளனர். மோகன் ராஜன் எழுதியுள்ள இப்பாடலை, குரு அய்யா துரை, சுவி சுரேஷ் பாடியிருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீசாக உள்ளது.