ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி | கொரோனா சூழலிலும் 'கிளாமர்' போட்டோக்களைப் பதிவிடும் நடிகைகள் | அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் |
நடிகர் இயக்குநர் ஆர்.பாண்டியராஜனின் மகனான பிருத்திவி பாண்டியராஜன், பல படங்களில் நடித்தும் இன்னும் க்ளிக் ஆகாமலே இருக்கிறார். கடைசியாக அவர் நடித்த தொட்ரா படத்தில் ஆணவக்கொலைகள் பற்றி உரக்கப்பேசினாலும் வணிகரீதியில் வெற்றியடையவில்லை.
இந்நிலையில் தற்போது நடித்து வரும் காதல் முன்னேற்றக்கழகம் படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார் பிருத்திவி பாண்டியராஜன். சாந்தினி கதாநாயகியாக நடிக்கும் 'காதல் முன்னேற்ற கழகம்'படத்தை மாணிக் சத்யா என்பவர் இயக்குகிறார்.
பிருத்திவி பாண்டியராஜன், சாந்தினியுடன் இந்த படத்தில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்குநர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 'ப்ளூஹில்ஸ் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் மலர்கொடி முருகன் தயாரிக்கும் இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இன்று மாலை 4 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார். சுப்பிரமணியபுரம் படத்தைப்போன்று எண்பதுகளில் நடைபெறும் கதைஅம்சத்துடன் 'காதல் முன்னேற்ற கழகம்'படத்தை உருவாக்கி வருகின்றனர்.