Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கடந்த 'பேட்ட'

12 ஜன, 2019 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Petta-collects-1-million-Dollar-in-US

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த 'பேட்ட' படம் இரு தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாடு வசூலுக்குப் பிறகு உலக அளவிலான வசூலில் அமெரிக்காவில் ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதுதான் பரபரப்பாகப் பேசப்படுவது வழக்கம்.

அந்த விதத்தில் 'பேட்ட' படம் மூன்று நாட்களில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துவிட்டது. 9ம் தேதியன்றே பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டன. அதில் மட்டும், 5,62,166 யுஎஸ் டாலர்களை வசூலித்தது. 10 மற்றும் 11ம் தேதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து தற்போது 1 மில்லியன் யுஎஸ் டாலர்களைக் கடந்துவிட்டது. அடுத்து இரண்டு வாரங்களுக்கு வேறு எந்த புதிய தமிழ்ப் படமும் இல்லாததால் 'பேட்ட' படத்தின் வசூல் 2 மில்லியனை எளிதில் கடந்துவிடும் என்கிறார்கள்.

'பேட்ட' படத்திற்கு முன்பாக “எந்திரன், காலா, கபாலி, 2.0” ஆகிய படங்கள் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்துள்ளன. '2.0' படம் மட்டும் 4.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது என்கிறார்கள். அதை 'பேட்ட' வசூல் கடக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்காவில் அதிக வசூலைக் கொடுக்கும் தெலுங்குப் படங்களும் 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக இல்லை என்பது கூடுதல் பலமாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாதவன் - அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர்மாதவன் - அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் ... சமந்தா கர்ப்பமா.? சமந்தா கர்ப்பமா.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JMK - Madurai,இந்தியா
12 ஜன, 2019 - 16:10 Report Abuse
JMK விசுவாசம் ஒரு படமா போர் படம்
Rate this:
Chris -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன, 2019 - 12:30 Report Abuse
Chris Dinamalar karuthuppadi Pettaya veelthiadhu visuwaasam endru dhaan thalaippu podannum.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in