Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை மீட்டு வந்ததற்கு நன்றி : மலையாள நடிகர்

12 ஜன, 2019 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Malayalam-Actor-Vineeth-Srinivasan-about-Petta

ரஜினி படம் வெளியாகும்போது மொழி பேதம் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும், தாங்கள் ஒரு பிரபலம் என்பதை மறந்து ரசிகர்களாக மாறுவதை அவரது ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் பார்த்து வருகிறோம். மலையாள இயக்குனரும், முன்னணி நடிகருமான வினித் சீனிவாசன் தீவிர ரஜினி ரசிகர்.

கடந்த முறை கபாலி படம் வெளியானபோது சென்னைக்கே வந்து ரோகிணி தியேட்டருக்கே வந்து தனது குழுவுடன் படம் பார்த்துவிட்டு சென்றார். தற்போது வெளியாகியுள்ள ரஜினியின் பேட்ட படத்தை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜுக்கு மிகப்பெரிய பாராட்டு கடிதம் ஒன்றை சோஷியல் மீடியாவில் எழுதியுள்ளார்.

அதில், “நீண்ட காலத்திற்குப் பிறகு தியேட்டரில் வெட்கத்தைவிட்டு ஒரு ரசிகனாக மாறி, விசிலடித்தும், நடனமாடியும் மகிழ்ந்தேன். மீண்டும் ரஜினியை எங்களிடம் கொண்டு வந்த சேர்த்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி.. நீண்ட நாளைக்கு பிறகு ரஜினி படங்களிலேயே மிகச்சிறந்த படமாக இந்த பேட்ட படம் வெளியாகியுள்ளது” என பாராட்டியுள்ளார் வினித் சீனிவாசன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமாவாகிறதுஸ்ரீதேவி வாழ்க்கை சினிமாவாகிறது மாதவன் - அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர் மாதவன் - அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

tamilselvan - chennai,இந்தியா
14 ஜன, 2019 - 14:53 Report Abuse
tamilselvan நீங்கள் அறிவாளி இருப்பார்கள்
Rate this:
kmathivanan - Trichy ,இந்தியா
13 ஜன, 2019 - 09:11 Report Abuse
kmathivanan Ithallam oru padam enna solluvathu re theriyella , thupakki eduthukkittu ange inge suttukittu arivikku ovvatha punch dialogue pesikittu , Tamil cinema never go to all India level forget about international level .
Rate this:
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
17 ஜன, 2019 - 16:22Report Abuse
Bhagat Singh Dasanஎங்களுக்கு இது போதும், மகிழ்ச்சி ஆரவாரம் கவலை மறந்து ஒரு மூணு மணிநேரம். ரொம்ப மண்டைய போட்டு கொடஞ்சுக்காதீங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in