Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'துளசி'யிலிருந்து தூக்கிய 'தூக்குதுரை'

11 ஜன, 2019 - 15:28 IST
எழுத்தின் அளவு:
Did-Viswasam-copy-of-Tulasi-movie

சிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள 'விஸ்வாசம்' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் நேற்றைய முதல் நாள் தமிழ்நாடு வசூலில் இந்தப் படம்தான் முதலிடத்தில் உள்ளது.

'விஸ்வாசம்' படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தின் கதை பற்றி எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளிவந்தன. நேற்று படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சில தெலுங்கு ரசிகர்கள் 'விஸ்வாசம்' படம் 2007ல் வெளிவந்த 'துளசி' தெலுங்குப் படம் போல இருப்பதாகச் சொன்னார்கள்.

பொயப்பட்டி சீனு இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வெங்கடேஷ், நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் ஒரு மகனும் பிறக்கிறான். ஆனால், வெங்கடேஷின் குடும்பம், சொந்த ஊரில் அடிதடி, பஞ்சாயத்து, பிரச்சினை என இருக்கும் குடும்பம். அதில் வெங்கடேஷும் ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பது நயன்தாராவுக்குத் தெரிய வருகிறது. ஒரு சண்டையில் நயன்தாராவின் சகோதரர் கொல்லப்பட, தன் மகனை அழைத்துக் கொண்டு வெங்கடேஷை விட்டுப் பிரிகிறார் நயன்தாரா. மருத்துவ ரீதியாக அவர்கள் மகனுக்கு பிரச்சினை இருக்க, அவரது உயிரைக் காப்பாற்றப் போராடுகிறார் வெங்கடேஷ். ஆபரேஷன் நடக்க இருக்கும் சமயத்தில் வில்லன் கோஷ்டி மகனைக் கடத்துகிறது. வெங்கடேஷ் மகனைக் காப்பாற்றி நயன்தாராவுடன் சேர்வதுதான் படத்தின் கதை.

'துளசி' படத்தின் கதையே சிலபல ஹிந்தி, தெலுங்குப் படங்களின் காப்பி என அப்போது பேசப்பட்டது. அந்த 'துளசி' கதையிலிருந்து 'தூக்குதுரை' கதாபாத்திரத்தையும், அப்படத்தின் நயன்தாராவின் 'வசுந்தரா' கதாபாத்திரத்திலிருந்து 'நிரஞ்சனா' கதாபாத்திரத்தையும் உருவாக்கி 'விஸ்வாசம்' என உருவாக்கிவிட்டார் சிவா. 'துளசி'யில் மகன், 'விஸ்வாசத்தில்' மகள் என்பதும், அதில் வெங்கடேஷ் படித்தவர், இதில் அஜித் படிக்காதவர் என்பது மட்டும்தான் வித்தியாசம். 'துளசி' பாக்ஸ்ஆபிசில் சூப்பர் ஹிட்டாக ஓடியது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கழுகு 2விற்கு யு சான்று : சனியன்று சிங்கள்டிராக் ரிலீஸ்கழுகு 2விற்கு யு சான்று : சனியன்று ... விஷால் திருமணம் : என்ன குழப்பம்? விஷால் திருமணம் : என்ன குழப்பம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Prince - Chennai,இந்தியா
16 ஜன, 2019 - 14:12 Report Abuse
Prince துளசி, விஸ்வாசம் இரண்டு படங்களும் பார்த்து இருக்கிறேன். கதையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் விசுவாசம் பார்க்கும்போது துளசி நினைவுக்கு வரவில்லை.
Rate this:
KayD - Mississauga,கனடா
14 ஜன, 2019 - 20:25 Report Abuse
KayD Thala director aa maathu illai naa un fans ae unaku எதை காட்ட போறாங்க னு உனக்கே தெரியும்..
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
12 ஜன, 2019 - 15:14 Report Abuse
Jothi சிறுத்தை படமே தெலுங்கு விக்ரமார்குடு ரீமேக் தான்......copy and paste... But now copy and paste with correction- விசுவாசம்
Rate this:
Susi - ,
12 ஜன, 2019 - 11:06 Report Abuse
Susi ஏன்டா இதுவும் சுட்ட வடதானா. அதைக்கூட நல்லா எடுக்கமாட்டீயாடா
Rate this:
Ms. K - ,
11 ஜன, 2019 - 22:16 Report Abuse
Ms. K எதிர்பார்த்தது தான் , இது மட்டும் இல்லை , ஏனோ சிவா வின் எல்லா படைப்புகளிலும் தெலுங்கு பட சாயல் இருக்கிறது !! ... வேதாளம் படம் கூட ஒரு தெலுங்கு பட சாயல் தான் ,! ஊசரவெல்லி என்று jr.N.T.R , tamannah நடித்த படம் , அதில் tammanna லவ்வர் , இதில் லட்சுமி தங்கை கெரக்டரு ,அவ்ளோ தான் வித்யாசம் , மதப்படி அந்த ஞாபக மறதி எபிசோட் எல்லாம் அதே தான் !!!! ... இந்த ஒழுங்கு ல விஜய் படத்த போய் கலாய்க்க வேண்டியது !!!!
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in