கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் நடிப்பில், 2012ம் ஆண்டு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் கழுகு. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. சத்யசிவா மீண்டும் இயக்க, கிருஷ்ணா, பிந்து மாதவி தொடர, காளி வெங்கட், யாஷிகா ஆனந்த் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுவும் மலைப்பிரதேசங்களில் நடக்கும் கதையாக தயாராகி உள்ளது.
படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், படம் தணிக்கைக்கு அனுப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு சான்று அளித்துள்ளனர். இதற்கிடையே, இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான, சகலகலாவல்லி என்கிற பாடலை நாளை(ஜன.,11, சனிக்கிழமை) வெளியிடுகின்றனர்.