ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் |
ஹிந்தித் திரையுலகத்தில் ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகர் விவேக் ஓபராய். சிலபல ஹிட் படங்களை அங்கு கொடுத்தவருக்கு பின்னர் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்தது. தென்னிந்தியா பக்கம், அதிலும் தமிழ்ப் பக்கம் போய் பார்க்கலாம் என அஜித் நாயகனாக நடித்த 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்தார்.
ஆனால், அந்தப் படம் அஜித் பட வரலாற்றிலேயே மோசமான படம் என்ற பெயரைப் பெற்றதால் விவேக் ஓபராயின் தமிழ் வருகை, வரவேற்பில் முடிவதற்குப் பதிலாக வருத்தத்தில் முடிந்தது. இனி, தென்னிந்தியா பக்கம் வரக் கூடாது என பாலிவுட்டிலேயே தங்கியவரை எப்படியோ பேசி சரி செய்து தெலுங்குப் பக்கம் மீண்டும் வரவைத்தார்கள்.
விவேக் ஓபராய், ஏற்கெனவே, ராம் கோபால் வர்மா இயக்கிய 'ரக்த சரித்திரா' படத்தின் மூலம் தெலுங்கிலும் நடித்தார். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தெலுங்கில் நடித்துள்ள 'வினய விதேய ராமா' படம் இன்று வெளியாகியுள்ளது. ராம் சரண் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக்தான் வில்லன். படத்தின் முதல் காட்சி முடிந்த பிறகு வரும் விமர்சனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.
'விவேகம்' படத்தின் மூலம் இழந்த பெயரை 'விவிஆர்' என சுருக்கமாக அழைக்கப்படும் 'வினய விதேய ராமா' படமாவது விவேக் ஓபராய்க்குக் கொடுத்தால் அவர் மீண்டும் தென்னிந்தியப் படங்களில் நடிக்கலாம். இல்லையென்றால், இனி, இந்தப் பக்கமே வர மாட்டார்.