Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாடு முதல் நாள் வசூல், 'விஸ்வாசம்' டாப் ?

11 ஜன, 2019 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Viswasam-top-in-TN-Collection-on-firstday

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் வெளியாகின. இருவருக்குமே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், இரண்டு படங்களையும் அவரவர் அபிமான நடிகரின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் நேற்று முன்பதிவு செய்து பார்த்தார்கள்.

அதிகாலைக் காட்சிகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் பல தியேட்டர்களில் அதிகாலை 1 மணிக்கே 'விஸ்வாசம்' காட்சி திரையிடப்பட்டது. ஆனால், 'பேட்ட' படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்குதான் நடந்தது. அதன் பிறகு காலை 8 மணி சிறப்பு காட்சிகளும், வழக்கம் போல தினசரி காட்சிகளும் நடைபெற்றன.

நேற்றைய முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் இதுவரை கிடைத்த தகவலின் படி 'விஸ்வாசம்' படம் தமிழ்நாடு முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்றும் 'பேட்ட' 20 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

பல ஊர்களில் பல தியேட்டர்களில் விஸ்வாசம் படத்திற்கு அதிகாலை 1 மணி சிறப்பு காட்சி நடைபெற்று உள்ளது. சராசரியாக டிக்கெட் விலை ரூ.700-1000 ரூபாய் விற்கப்பட்டுள்ளது. ஆனால் பேட்ட படத்திற்கு பல ஊர்களில் 4 மணிக்கு காட்சிக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விஸ்வாசம் படம் முதல்நாளாக ரூ.30 கோடி வரை வசூலித்ததாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்கார் படம் முதல்நாள் வசூலாக ரூ.25 கோடி வரை வசூலித்ததாக தகவல், இப்போது அந்த வசூலை விஸ்வாசம் முறியடித்திருக்கிறது. அதேசமயம் இந்தியாவின் பிறமாநிலங்களின் வசூல் மற்றும் உலகளவில் வசூலை கணக்கிட்டால் நிச்சயம் பேட்ட தான் முதலிடத்திற்கு வரும் என்பது ஆணித்தரமான உண்மை.

'பேட்ட' படத்தில் பழைய உற்சாகமான, ஸ்டைலிஷான ரஜினியைப் பார்ப்பது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. 'விஸ்வாசம்' படத்தில் அப்பா, மகள் சென்டிமென்ட் சிறப்பாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்தப் படங்களுக்கான சிறப்பம்சமாக ரசிகர்களிடம் பேசப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் அடுத்து வரும் விடுமுறை நாட்களில் வசூல் சாதனை புரிய இவை உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
டிவியில் ஒளிபரப்பான பிறகும் 100ஐத் தொட்ட 96டிவியில் ஒளிபரப்பான பிறகும் 100ஐத் ... விவேக் ஓபராய் - 'விவேகம்' கெடுத்ததை 'விவிஆர்' கொடுக்குமா ? விவேக் ஓபராய் - 'விவேகம்' கெடுத்ததை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

11 ஜன, 2019 - 18:58 Report Abuse
jeyasingh in Tamilnadu viswasam beats petta in first day collection.tamilnadu la win Panama vera state la highest collection nu sollratha epadi iruku na vitla wife Mathika matta,Ana pakathu vitukaran mathipan nu solla mathiri iruku, Tamilnadu la athala than winner, accept the truth
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11 ஜன, 2019 - 18:17 Report Abuse
Mirthika Sathiamoorthi யாரோ ஒருத்தர் இங்க புள்ளிவிவரம் கொடுத்திருக்காரு...அவர் பாணியிலே... ஆந்திர மற்றும் தெலுங்கானா தியேட்டர் கிடைக்கலை ( விஸ்வாசத்துக்கும் தியேட்டர் கிடைக்கலை ரிலீஸ் தேதி மாற்றம் இது தெலுங்கு படம் துளசி மாதிரின்னு ஒரு பேச்சு வேற... இந்த நேரத்தில் சர்க்கார் வந்திருந்தாலும் இதே நிலை ) ஹிந்தியில் ரஜினிக்கு மார்க்கெட் இல்லை. அப்புடியா? ரஜினிக்கு மார்க்கெட் இல்லைன்னா தமிழநாட்டு ஹீரோ ஒருத்தனுக்கு மார்க்கெட் இல்ல ஹிந்தியில்...கேரளா மற்றும் கர்நாடாவில் அஜித்துக்கு நல்ல கூட்டம்...அப்போ ரஜினிக்கு கூட்டம் இலைன்னு அர்த்தமா? அப்பயேன் விநியோக உரிமை 2.5 கோடிக்கும் 3.5 கோடிக்கும் போச்சு? ( பேட்ட கேரள உரிமை 6.5 கோடி வாங்குனது நடிகர் பிரிதிவிராஜ் , கர்நாடக 11 கோடி) ஆளே வராத ரஜினி படத்துக்கு ஏன் இவளவு காசு? புள்ளி விவரம் சொன்னவருதான் விளக்கணும்...
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
11 ஜன, 2019 - 18:06 Report Abuse
Thalaivar Rasigan ரெண்டு மாசத்துக்கு முன்பே வாடகை அடிப்படையில் விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர்கள் பிடித்து விட்டனர். (சென்னை - திருச்சி தவிர) அதனால் ஓப்பனிங் விசுவாசம் படத்துக்கு அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் படத்தை பற்றி அஜித் ரசிகர்களே புலம்புகிறார்கள்.
Rate this:
vns - Delhi,இந்தியா
11 ஜன, 2019 - 17:28 Report Abuse
vns அருவருக்கத்தக்க கூத்தாடிகளின் தொண்டர்களளை மட்டுமே கொண்ட மாநிலம் தமிழகம். இன்றைக்கு ஒரு மகன் தந்தையை விசுவாசம் படம் பார்க்க பணம் கொடுக்காததற்க்காக மண்ணெண்ணெயை விட்டு கொளுத்தி இருக்கிறான். இதுதான் முன்னேறிய தமிழகம்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11 ஜன, 2019 - 17:22 Report Abuse
Endrum Indian இதனால் டாஸ்மாக் நாடு அடையும் பலன் என்ன???எந்த சனியனுக்கு எவ்வ்ளவு கிடைத்தால் என்ன, டாஸ்மாக் நாடு அதே கீழ்மையான நிலையில் தான் இருக்கின்றது.
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in