Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ஜோடியாகிறார் வித்யாபாலன்

11 ஜன, 2019 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Vidayabalan-to-lead-with-Ajith

பாலக்காட்டில் பிறந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். அவருக்கு தமிழ் சினிமா மீது ஒரு கோபம் இருக்கிறது. முதன் முதலாக அவர் அறிமுகமாக இருந்தது ஒரு தமிழ் படத்தில் தான். ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏதேதோ காரணம் சொல்லி படத்திலிருந்து நீக்கி விட்டார். அது முதல் அவருக்கு தமிழ் சினிமா மீது கோபம்.

இதன் காரணமாக கபாலி படத்தில் ரஜினி ஜோடியாக, இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாக, மெர்சல் படத்தில் விஜய் ஜோடியாக (நித்யா மேனன் கேரக்டர்) நடிக்க கேட்டபோது மறுத்து விட்டார். இப்போது அஜித் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் மனைவியாக நடிக்கிறார். அஜித், அமிதாப்பச்சன் கேரக்டரில் நடிக்கிறார்.

ஹிந்திப் படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடி இல்லை, ஆனால் ரீமேக்கில் அஜித்துக்கு மனைவி கேரக்டர் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் வித்யாபாலன் நடிக்கிறார். சில காட்சிகளே வரும் கேரக்டர்தான். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பதால் அவரது வேண்டுகோளுக்காக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கடாரம் கொண்டான் படப்பிடிப்பு நிறைவுகடாரம் கொண்டான் படப்பிடிப்பு நிறைவு வீட்டு முன்பு தீக்குளித்த ரசிகர் : கேஜிஎப் ஹீரோ வேதனை வீட்டு முன்பு தீக்குளித்த ரசிகர் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

வால்டர் - Chennai,இந்தியா
11 ஜன, 2019 - 14:41 Report Abuse
வால்டர் ஸ்ரீதேவி கூட ஜோடியா நடிச்சாங்க. அப்புறம் அவங்க கதை என்னாச்சுன்னு பாத்திங்களா. போனி கபூர் தயாரிப்பு வேற.
Rate this:
Ms. K - ,
11 ஜன, 2019 - 13:09 Report Abuse
Ms. K அப்போ மொதல்ல ரிஜெக்ட் ஆனது மலையாளம் படம் இல்லையா ?! ஆனா ரிசன்டா காற்றின் மொழியை புரமோட் செஞ்சங்களே !!! இப்போ கோவம் போய்டுச்சே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in