Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்துக்கு ரொம்ப பிடித்த படம் விஸ்வாசம்!

10 ஜன, 2019 - 23:34 IST
எழுத்தின் அளவு:
Ajiths-favorite-movie-is-Vishvasam!

அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து, விஸ்வாசம் படத்திலும் இணைந்துள்ள இயக்குனர் சிவா உடன் பேசியதிலிருந்து:


விஸ்வாசம் படம் பற்றி..


.'ரொம்ப சந்தோஷமான, 'மாஸான' அனைவரையும் திருப்திபடுத்தும், உணர்ச்சிகரமான குடும்பப் படம்' என, படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். குடும்ப உறவுகளுக்கு மரியாதை கொடுக்கும் அனைவருக்கும், இந்த படம் பிடிக்கும்.


ஏராளமான நட்சத்திரபட்டாளங்கள் இருக்கின்றனரே...


நயன்தாரா, தம்பி ராமைய்யா, கோவை சரளா, ரோபோ சங்கர், யோகிபாபு என அனைவரும் அறிமுகமான நடிகர்கள்; இது, படத்திற்கு மிகப்பெரிய பலம். அனைவருக்கும் இப்படம் பிடித்துள்ளது.


அஜித் படங்களை தொடர்ந்து இயக்குவதற்கு, காரணம் ஏதாவது?


அஜித் போன்ற மிகப்பெரிய நடிகரை, நான்கு படங்கள் இயக்கியது, கடவுள் கொடுத்த வரம். அடுத்தடுத்த படங்கள், மாறுபட்டதாக அமைந்தன. 'நான்கு படங்களில் விஸ்வாசம் தான் பெஸ்ட்' என அஜித் கூறினார். ரொம்ப ரசித்து நடித்தார்.


அஜித்தை பற்றி?


ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், தங்கமான மனிதர். குறை சொல்ல முடியாத மனிதர்.


அவருடன் பணியாற்றியதில் சவாலான விஷயம் எது?


பெரிய நடிகருடன் பணியாற்றும் போது, அந்த படம், எல்லாருக்கும் பிடித்த மாதிரியானதாக இருக்க வேண்டும் என்பது, எனக்கு சவாலாக இருந்தது. படித்தவர்கள், படிக்காதவர்கள் மற்றும் 8 - 80 வயது வரையிலான ரசிகர்கள் அஜித்துக்கு உள்ளனர். அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் படம் எடுக்க வேண்டும்.


அனைத்து படங்களும், 'வி' என்ற எழுத்தில் ஆரம்பிப்பது ஏன்?


வீரம் படத்தின் தலைப்பு, ரொம்ப யதார்த்தமாக நடந்த விஷயம். கதைக்கான பெயராக அது அமைந்தது. வேதாளம் படத்தில், அஜித் பாத்திரத்தின் பெயர், வேதாளம் கணேஷ் என்பதால், அந்த பெயர் அமைந்தது. விவேகம் படம், வெளிநாட்டில் நடக்கிற கதை. அதற்கு நல்ல தமிழ் பெயர் வைக்கலாம் என முடிவு செய்து, விவேகம் என பெயர் வைத்தோம். விஸ்வாசம் என்ற தலைப்பு, அனைவரும் சேர்ந்து முடிவு செய்தது.


அடுத்த படம்?


என்னைப் பொறுத்தவரை, ஒரு பட வேலை நடந்து கொண்டிருக்கும் போது, அடுத்த படத்தை பற்றி யோசிப்பதில்லை. விஸ்வாசம்படத்தை துவக்கும்போதே, ஜன., 10ம் தேதி வெளியிட முடிவு செய்து, 4ம் தேதியே அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்து விட்டேன். ஜன., 10க்கு பின் தான், அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பேன்.


ரஜினியின் பேட்ட படத்துடன் மோதியது ஏன்?


படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போதே, அதை வெளியிடும் தேதியை முடிவு செய்து விட்டோம். இது, முன் கூட்டியே திட்டமிட்டது. ரஜினி படத்தோடு மோத வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஞாபகம் வருதே...!ஞாபகம் வருதே...! உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் : பேட்ட ரஜினி மகிழ்ச்சி உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in