Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தையை எரித்த மகன், கத்தி குத்து : விஸ்வாசம் ரிலீஸில் அதகளம்

10 ஜன, 2019 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Viswasam-Release-:-Few-unwanted-incidents-happend

நடிகர் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்மன்றத்தை கலைத்த பின்னரும், அவரது ரசிகர்கள், அவருக்கு வான் உயர கட்-அவுட், பால் அபிஷேகம் என கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடந்தேறி உள்ளன.

தந்தையை எரித்த மகன்


வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் புதுதெருவை சேர்ந்தவர் அஜித்குமார்(20). விஸ்வாசம் படம் பார்க்க தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆந்திரமடைந்த அஜித், தந்தை பாண்டியனின்(45) முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பாண்டியன் 40% சதவீதம் தீக்காயத்துடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அஜித்தை கைது செய்தனர்.2 பேருக்கு கத்தி குத்து

வேலூரில் விஸ்வாசம் படம் வெளியான அலங்கார் தியேட்டரில் சீட் பிடிப்பது தொடர்பாக அஜித் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பிரசாத் மற்றும் அவரது மாமா ரமேஷ் ஆகியோருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசாத் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கட்-அவுட் சரிந்து காயம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா தியேட்டரில் பால் அபிஷேகம் செய்வதற்காக ஏறிய போது சினிமா பேனர் சரிந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, இளைஞர்கள் கையில் என்று மறைந்த அப்துல் கலாம் அய்யா அவர்கள் சொல்லிவிட்டு சென்றார். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்ட சம்பவம், இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரும் மதிப்பை பெற்று தந்தது. மேலும் சென்னை வெள்ளம், கஜா புயல் பல இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை புரட்டி போட்ட போது, களத்தில் இறங்கி வேலை செய்தவர்கள் இளைஞர்கள்.

இப்படிப்பட்டவர்கள் இருக்கும் அதேசமயம், இது போன்ற சம்பவங்கள் பார்க்கும் போது, சமூகம் எதை நோக்கி செல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நடிகரின் படத்தை கொண்டாட வேண்டியது தான் அதில் தவறில்லை. ஆனால், தந்தையை கொல்லும் அளவுக்கு செல்ல வேண்டுமா என்ன.?

நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள், பேனர், வான வேடிக்கை, மேளதாளம், பாலாபிஷேகம் போன்றவற்றுக்காக செய்யும் செலவுகளை ஆக்கபூர்வமான மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தலாமே என்பதே சராசரி மனிதனின் கருத்தாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
சந்திரபாபு விவரம் திரட்டும் பார்த்திபன் : படம் பண்ணுவாரா?சந்திரபாபு விவரம் திரட்டும் ... ரஜினி பட தியேட்டர்களில் நடந்த திருமணம் ரஜினி பட தியேட்டர்களில் நடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

meenakshisundaram - bangalore,இந்தியா
13 ஜன, 2019 - 05:24 Report Abuse
meenakshisundaram படம் பார்க்க பணம் தராத தந்தை கொலை ,Pongal பணத்தை தராத மனைவி கொலை -இதுவே இன்றைய தமிழ்நாடு .தமிழர்களே நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? மேலும் இலவசமும் ஒதுக்கீடுகளும் கேட்டா? சத்யராஜ் ,பாரதிராஜா,சீமான்,வீரமணி .கருப்பியாக்கள் எங்கே ஓடி ஒளிந்தார்கள்?
Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
10 ஜன, 2019 - 19:43 Report Abuse
அன்பு தலைவன் எப்படியோ, தொண்டனும் அப்படி
Rate this:
King of kindness - muscat,ஓமன்
10 ஜன, 2019 - 17:59 Report Abuse
King of kindness இந்தியாவில் வேறு எங்கும் இந்த அளவுக்கு நடிகர்களின் மீது பைத்தியக்காரதனம் கிடையாது
Rate this:
Ms. K - ,
10 ஜன, 2019 - 17:08 Report Abuse
Ms. K எதற்காக படம் நடிக்கிறார்கள் ?, ரசிகர்கள் பார்த்து , விசில் அடித்து கொண்டாடினால் தான் இவர்கள் பிழைப்பு ஒடும். பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தால் தான் ஒரு சாதாரண படத்துக்கு கூட பில்டப் அதிகமாக இருக்கும். அதேசமயம், அந்த ரசிகர்களை முறைப்படுத்த வேண்டும், இன்னது செய்ய வேண்டாம் என்று ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்
Rate this:
Pari IP - Chennai,இந்தியா
10 ஜன, 2019 - 16:50 Report Abuse
Pari IP ஏன்டா மெண்டல் கலா பேசாம உங்க நடிகர் படம் ரிலீஸ் பண்ணும்போது அவர் பெயரை சொல்லி ஏதாவது நல்ல காரியம் பண்ணலாம் ல ஒரு வேல சாப்பாடு போடலாம் ஏதாவது எழ குழந்தைகளுக்கு அப்படி பண்ணா அவருக்கும் பெருமை. அது விட்டுட்டு யாருக்கும் ஒரு பைசா பிரயோஜனம் இல்ல இந்த பால் அபிஷேகம் பண்றதுல
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in