Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகிழ்ச்சியில் 'பேட்ட', 'விஸ்வாசம்' குழுக்கள்!

10 ஜன, 2019 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Petta---Viswasam-team-happy

பொங்கலுக்காக ஏற்கனவே முன்று நாட்கள் அதாவது ஜன., 15,16,17 தேதிகளில் மட்டும் விடுமுறை நாளாக இருந்தது. தற்போது, 14ம் தேதியையும் தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அந்த நாளுக்கு பதிலாக பிப்., 9, சனிக்கிழமை வேலை நாள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, 12ம் தேதி சனிக்கிழமை மற்றும் 13ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரு தினங்களும் அரசு விடுமுறையாக இருப்பதால், 14ம் தேதியையும் விடுமுறை நாளாக அரசுத் தரப்பு அறிவித்துள்ளதால், ஜனவரி 12லிருந்து 17 வரை, மொத்தம் ஆறு நாட்களுக்கு விடுமுறை தொடர்ச்சியாக வந்து விடுகிறது. இதனால், அரசு ஊழியர்கள் ஏக மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படக் குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

காரணம், அரசு விடுமுறை தினங்களான ஜன 12 முதல் 17 வரையில், திரையரங்குகளில் சினிமா படங்களை ஆறு காட்சிகள் வரையில் திரையிட்டுக் கொள்ளலாம் எனவும் அரசுத் தரப்பு அறிவித்துள்ளதால், தொடர்ச்சியான ஆறு நாட்களிலும் 36 காட்சிகளுக்கும், 'பேட்ட', 'விஸ்வாசம்' படங்கள் வசூலை வாரிக் குவித்து விடும். இதையடுத்தே, இரு படக் குழுவினரும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்சர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்டார் ... படப்பிடிப்பு முடிந்தது : தமிழ் புத்தாண்டில் 'காஞ்சனா 3' படப்பிடிப்பு முடிந்தது : தமிழ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
12 ஜன, 2019 - 16:18 Report Abuse
JMK ajith padam idhuvari i200 crkodi thaandavillai ? indha padam thaanduma ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in