Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தளபதி, மன்னன் படங்களுக்குப் பிறகு 2.0, பேட்ட

09 ஜன, 2019 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Yesterday-Thalapathy,-Mannan---Today-2point0,-Petta

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே தனி வரவேற்பு உண்டு. அது 80களில் இருந்து ஆரம்பமாகி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேறு எந்த ஹீரோவுக்கும் இல்லாத ஒரு வரவேற்பை 40 வருடங்களாக காப்பாற்றி வருகிறார் ரஜினிகாந்த்.

90களில் அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் 1991 நவம்பர் 5ம் தேதியன்று தளபதி படம் வெளிவந்தது. அந்தப் படம் சென்னையில் சக்தி அபிராமி தியேட்டரில் 175 நாட்கள் ஓடியது. சென்னையில் 2 தியேட்டர்கள், மதுரை, கோவை, நெல்லை, சேலம், மும்பை, பெங்களூர், திருவனந்தபுரம், பாலக்காடு, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் உள்ள தியேட்டர்களில் 100 நாள் ஓடியது.

அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே 1992 ஜனவரி 14ம் தேதி மன்னன் படம் வெளியானது. மன்னன் படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வந்ததால் பல தியேட்டர்களில் அந்தப் படத்தைத் திரையிடுவதற்காக தளபதி படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கினார்கள்.

1991 நவம்பரில் வெளிவந்த தளபதி படம், 1992 ஜனவரியில் வெளியான மன்னன் படத்துடனும் ஓடிக் கொண்டிருந்தது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் ஓடின. தளபதி படம் 175 நாள் ஓடியதைப் போலவே மன்னன் படமும் 175 நாள் ஓடி சாதனை படைத்தது.

அந்த சாதனை 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அரங்கேறுகிறது. 2018 நவம்பர் 29ம் தேதி வெளியான 2.0 படம் நாளை(ஜன.,9) பேட்ட படம் வெளியான பின்னும் சில தியேட்டர்களில் ஓட உள்ளது. பேட்ட படத்திற்கான கொண்டாட்டத்துடன் இந்தக் கொண்டாட்டத்தையும் ரஜினி ரசிகர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள் : சிம்ரன்ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள் : ... வௌியானது பேட்ட, விஸ்வாசம் : ரசிகர்கள் கொண்டாட்டம் வௌியானது பேட்ட, விஸ்வாசம் : ரசிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

இந்தியன் kumar - chennai,இந்தியா
14 ஜன, 2019 - 15:26 Report Abuse
இந்தியன் kumar இறைவன் அருள் உள்ளவர்களுக்குத்தான் இந்த சிறப்புகள் சேரும்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
10 ஜன, 2019 - 08:43 Report Abuse
Raman Ganesan எங்கப்பா புலம்பல்கள் சீக்கீரம் வாங்க வந்து அழுகுங்க
Rate this:
raji - CHENNAI,இந்தியா
10 ஜன, 2019 - 08:30 Report Abuse
raji சிறப்பு. மகிழ்ச்சி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in