Advertisement

சிறப்புச்செய்திகள்

யார் யாரை 'வணங்கான்' ? சலசலப்பை ஏற்படுத்தியுள்ள பாலா, சூர்யா | 'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்.. | நடிகை காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தினா! | ''திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே'': வெளியானது வாரிசு ‛தீ தளபதி' பாடல் | புதுமுகம் அறிமுகம் - நடிகை கோபிகா உன்னிகிருஷ்ணன் | கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா': ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது | அஜித்தின் கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கட்டும்: மனம்திறந்த வினோத் | பாலிவுட்டுக்கு ‛சர்க்கஸ்' புது தெம்பை தரும் ; பூஜா ஹெக்டே நம்பிக்கை | சூடுபிடிக்கும் நகைச்சுவை நடிகர் பட டைட்டில் விவகாரம் | மலையாள குணச்சித்திர நடிகர் கொச்சு பிரேமன் காலமானார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, அஜித்தை சீண்டுகிறதா 'தாதா 87' படக் குழு?

09 ஜன, 2019 - 14:00 IST
எழுத்தின் அளவு:
Dhadha-87-movie-poster-slams-Petta-and-Viswasam

பொங்கல் ரீலீசுக்கென்று தமிழில் பல படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரு படங்களும், பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால், மற்ற படங்களுக்கு ரீலீஸ் செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இப்படி வாய்ப்புக் கிடைக்காமல் தள்ளிப் போய் இருக்கும் ஏராளமான படங்களில், விஜய் ஸ்ரீ இயக்கும் நடிகர் சாருஹாசனின் படமான 'தாதா 87'ம் ஒன்று. நடிகர் சாருஹாசனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும், நடிகர் ஜனகராஜும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதில் ஜனகராஜுக்கு முக்கியமான கேரக்டர் ரோல் வழங்கப்பட்டுள்ளது.

படம் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கான போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், 'என் பேட்டையில எவனும் விஸ்வாசமா இல்லை. நீ மட்டும் ஏன்?' என சாருஹாசன் கேட்பது போன்ற வரிகளுடன், 'தாதா 87' படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்யா என்ற கேரக்டரில் நடிக்கும் சாருஹாசன், யாரைப் பார்த்து இந்த கேள்வியை கேட்கிறார் என்பது புரியாமல் பலரும் பலவிதமாக பரபரப்போடு பேச, படத்துக்கு நல்ல விளம்பரம் எனக் கூறி குதூகலிக்கிறது படக் குழு.

'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' என இரு வார்த்தைகளையும் போஸ்டரில் படுத்தி உள்ளதால், படக் குழு, ரஜினி மற்றும் அஜித்தை நோக்கியே அந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது என, போஸ்டருக்கு அர்த்தம் சொல்லி, பலரும் ரஜினி, அஜித்தோடு சண்டை இழுத்து விடுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு பட வெற்றி : குவியும் பட வாய்ப்புகள்!ஒரு பட வெற்றி : குவியும் பட ... சாயிஷாவுடன் காமெடி நடிகர் 'ராப்' நடனம்! சாயிஷாவுடன் காமெடி நடிகர் 'ராப்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in