Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட, விஸ்வாசம்' - அந்த 4 கோடியும் வசூலாக மாறுமா ?

08 ஜன, 2019 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Petta,-Viswasam-:-4-crore-will-turn-as-money.?

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது டிரென்டிங், வியூஸ் இவைகள்தான் அதிகமாகப் பேசப்படும் வார்த்தைகள். சமூக வலைத்தளங்களில் டிரென்டிங், யு டியுபில் டிரென்டிங், யு டியுபில் அதிக வியூஸ் (பார்வைகள்) என தங்களது படங்கள் அதிலும் சாதனை படைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அவற்றிற்கும் ஒரு படம் ஓடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அதை ஒரு வறட்டு கௌரவமாக பலரும் கருதுகிறார்கள் என்பதே உண்மை.

டிரென்டிங்கில் வந்த படங்களும், அதிக பார்வைகளைப் பெற்ற டீசர், டிரைலர்களைக் கொண்ட படங்களும் வெற்றிகரமாக ஓடி லாபம் சம்பாதிக்க உதவ வேண்டுமில்லையா ?. ஆனால், அது நடப்பதில்லையே. உதாரணத்திற்கு, 'பேட்ட' படத்தின் டிரைலருக்கு 1 கோடியே 99 லட்சம் பார்வைகள் கிடைத்திருக்கிறது. 'விஸ்வாசம்' டிரைலருக்கு 2 கோடியே 27 லட்சம் பார்வைகள் கிடைத்திருக்கிறது.

அதிகபட்சமாக ஒருவர் ஒரு டிரைலரை பத்து முறை மேல் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த இரண்டு படங்களின் டிரைலர்களின் பார்வையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தமாக, 4 கோடியே 36 லட்சம் பார்வைகள் வருகிறது. அதில் இரண்டு படங்களுக்கும் சேர்த்து 2 கோடியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, ஒரு டிக்கெட்டுக்கு சராசரியாக 175 ரூபாய் வைத்துக் கொண்டாலும் 350 கோடி ரூபாய் வருகிறது. அப்படி அந்தத் தொகையை இரண்டு படங்களும் வசூலித்து விட்டால் லாபமோ லாபம்தான்.

கணக்காகப் பார்க்க நன்றாக இருக்கிறது, ஆனால் நடக்க வேண்டுமே...?.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயப்பிரதாவாக அசத்தும் ஹன்சிகாஜெயப்பிரதாவாக அசத்தும் ஹன்சிகா சம்பள பாக்கியை மறுத்த சாய் பல்லவி : பாராட்டும் பட உலகம் சம்பள பாக்கியை மறுத்த சாய் பல்லவி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Susi - ,
09 ஜன, 2019 - 10:40 Report Abuse
Susi வாய்ப்பில்லை ராஜா
Rate this:
oce - tokyo,ஜப்பான்
09 ஜன, 2019 - 04:00 Report Abuse
oce வர வர படங்களின் பெயர்களை கண்டபடி வைக்கிறார்கள். ஸ்டூல் நாற்காலி அரிவாள் மணை பேட்ட ஓட்ட கோட்ட குண்டும் குழியும் லொட்ட லொசுக்கு என பெயர்கள் வைக்கலாமா. படம் ஓடுமா.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08 ஜன, 2019 - 17:38 Report Abuse
Mirthika Sathiamoorthi ஏன் சார் காமெடி பண்ணிக்கிட்டு...2.௦ மற்றும் சர்க்கார் இரு படங்களும் தமிழ்நாட்டில் மட்டும் 120 கோடி வசூலிச்சுன்னு புள்ளிவிவரம்...டிக்கெட் விலை 120 ரூபாய் அப்போ எட்டு கோடிபேர் இருக்கறப்ப ஒரு கோடி பேர் மட்டுமேதான் தமிழ்நாட்டுல தியேட்டரில் படம் பாத்தாங்களா ? ( இருமுறை படம் பாத்தவங்களையும் கழிச்சா?) குத்து மதிப்பா 2 கோடி பேர் பாத்திருந்தா கூட 240 கோடி வந்திருக்கணுமே? அப்போ யறுதான் தியேட்டரில் படம் பாத்தது ? 50 லட்சம் பேர் மட்டும் பாத்தா 60 கோடி ..அப்போ எல்லாப்படமும் சூப்பர் ஹிட்டு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in