அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
கிரிஷ் இயக்கத்தில் கீரவானி இசையமைப்பில் பாலகிருஷ்ணா, வித்யா பாலன் மற்றும் பலர் நடிக்கும் 'என்டிஆர் கதாநாயகடு' தெலுங்குப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. மறைந்த நடிகரும், ஆந்திரா முதல்வருமாக இருந்த என்டிஆர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதன் முதல் பாகம்தான் நாளை வெளியாகிறது.
என்டிஆர் பல வெற்றிப் படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். அவர்கள் அனைவரது கதாபாத்திரங்களிலும் தற்போதைய இளம் நடிகைகள் நடித்துள்ளார்கள். குறிப்பாக என்டிஆர் ஜோடியாக சாவித்ரி, கிருஷ்ணகுமாரி, பிரபா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, ஸ்ரீதேவி ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களது கதாபாத்திரங்களில் சாவித்ரி ஆக நித்யா மேனன், கிருஷ்ணகுமாரி ஆக பிரணிதா, பிரபா ஆக ஸ்ரேயா, ஜெயப்பிரதா ஆக ஹன்சிகா, ஜெயசுதா ஆக பாயல் ராஜ்புத், ஸ்ரீதேவி ஆக ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா இருக்கும் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்கள். என்டிஆர் நடித்த 'யமகோலா' படத்தில் இடம் பெற்ற 'சிலக்காக கொட்டுடு கோடிதே' என்ற பாடல் போஸ்டர்தான் அது. பெரிய காலர் வைத்த சட்டை, பெல்பாட்டம் அணிந்த என்டிஆர், பூ டிசைன் போட்ட புடவை, பெரிய கொண்டை என ஜெயப்பிரதா ஆகியோரது தோற்றத்தில் பாலகிருஷ்ணா, ஹன்சிகா அப்படியே உள்ளார்கள். அதிலும் ஜெயப்பிரதாவிடம் இருக்கும் அதே கவர்ச்சியுடன் ஹன்சிகா இருப்பது தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நாளை வெளியாக உள்ள இந்தப் படம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்தை விட அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.