Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டல்லாஸ், மலேசியாவில் களைகட்டும் பேட்ட

08 ஜன, 2019 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Petta-:-Malaysia,-Dallas-Rajini-fans-ready-to-welcom

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படம் ஜன.,10ம் தேதி ரிலீஸாகிறது. தமிழகத்தை தாண்டி தென்னிந்திய மற்றும் பாலிவுட்டில் வெளியாகும் பேட்ட படமும் உலகளவிலும் அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பேட்ட படத்தின் மலேசிய உரிமையை, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் வாங்கி வெளியிடுகிறார். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள், மலேசியாவில் களை கட்டி உள்ளன. இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி, கோலாலம்பூரில் உள்ள ஷகிரி-லா ஹோட்டலில் நடந்தது.

"பேட்ட" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உல்லாலா" பாடலை மலேஷியா பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் பாடி அசத்தினர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் 23வது விநியோக திரைப்படமான பேட்ட, மலேசியாவில் 140 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



டல்லாஸிலும் தயாராகும் ரசிகர்கள்


ரஜினி மக்கள் மன்றம், வடஅமெரிக்கா சார்பில் "ரஜினி மக்கள் மன்றம்" ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெக்ஸ்சாஸின் டல்லாஸ் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.



அத்துடன், பேட்ட படம் ஜன.,10ம் தேதி ரிலீஸாவதை வரவேற்கும் விதமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் அமெரிக்காவில் பேட்ட படத்தை விநியோகிக்கும் திங்க் பிக் புரொடக்ஷன் குழுவும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் "பேட்ட" டி-சர்ட் வழங்கப்பட்டு, "பேட்ட பராக்" என்கிற வாசகத்துடன் கூடிய கேக் வெட்டப்பட்டது. இன்னிசை நிகழ்ச்சியுடன், சுவையான இரவு உணவு வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

ஆக டல்லாஸில் இந்த குளிர் காலத்திலும் பேட்டயின் அனல் அடிக்க ஆராம்பித்து இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் மகன் பட டிரைலரை வெளியிடும் சூர்யாவிக்ரம் மகன் பட டிரைலரை வெளியிடும் ... குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ஷக்தி குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
08 ஜன, 2019 - 16:06 Report Abuse
JMK விஜய் / அஜித் இப்படி ஒரு வாய்ப்பு எப்பாவது கிடைக்குமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in