ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் மீளவில்லை. அதனால், திருவாரூர் சட்டசபைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் பலரும், இன்றளவிலும், மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நிறைய பொருள் உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் சோர்வைப் போக்க, அவர்களில் பலரையும் சினிமாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா? என நடிகர் சிவகார்த்திகேயனிடம் சிலர் கேட்டுள்ளனர்.
விவசாயத்தின் முக்கியத்துவத்தையும்; மகத்துவத்தையும் உணர்த்தி எடுக்கப்பட்டிருக்கும் என்னுடைய படமான 'கனா' படத்தையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு போட்டுக் காண்பிக்கலாமே என்று கூறிவிட்டு, பட்டுக்கோட்டை பகுதியில் இருக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கு தகவல் அனுப்பி, பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து 'கனா' படத்தை பார்க்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் அழைத்து வந்து 'கனா' படத்தை போட்டு காண்பித்து மகிழ்ந்துள்ளனர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்.