பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
கடந்த ஆண்டு, தெலுங்கில் தொடர்ச்சியாக இரு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் நடிகை தமண்ணா, 'கே.ஜி.எப்.,' முதல் பாகத்தில் நடித்து, கடந்த ஆண்டை முடித்திருந்தார்.
இந்நிலையில், அவரது அடுத்த படமாக ரிலீசாக இருப்பது 'கண்ணே கலைமானே'. படத்தில் வங்கி அதிகாரியாக, புது வேடத்தில் நடித்திருக்கும் தமன்னாவுக்கு, ஜோடியாக நடிப்பவர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், உதயநிதியும், தமன்னாவும் இணைந்து படத்துக்கான புரமோஷன் வேலைகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில், ரசிகர்களை சந்தித்த தமன்னாவிடம், 'அடுத்த படமான 'கண்ணே கலைமானே' ரிலீஸ் தேதி என்ன?' என்பது குறித்து கேட்க, அதற்கு பதில் அளித்த அவர், 'வரும் பிப்.,1ல், 'கண்ணே கலைமானே' படம் ரிலீஸ் ஆகிறது' என்றார். அடுத்த கேள்வியாக, 'படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும்?' என்று கேட்க, அதற்கும் பதிலளித்தார் தமன்னா. 'படத்தின் டிரைலர் வரும் 9ல் ரிலீஸ் ஆகும்' என தெரிவித்தார்.