கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
வெளிநாட்டு டி.வி. நிகழ்ச்சியான பிக்பாஸை இந்தியாவில் தொடங்கி வைத்தது ஸ்டார் டி.வி. குழுமம். இந்த நிகழ்ச்சி வழியாகத்தான் சன்னி லியோன் பாலிவுட்டுக்கு வந்தார். தற்போது இதன் 12வது சீசன் நடந்து முடிந்திருக்கிறது. இதில் இந்தி டி.வி நடிகை தீபிகா கார்கர் வெற்றி பெற்று டைட்டில் வென்றார்.
இந்த நிகழ்ச்சியில் தீபிகா கார்கர், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், மாடல் அழகி சிருஷ்டி ரோட், கர்னவீர் போரா, நேகா பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஸ்ரீசாந்த் தான் வெல்வார் என்று பலரும் கணித்தனர். காரணம், கிரிக்கெட் சூதாட்டச் சர்ச்சையில் சிக்கிய அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் பலரும் அதை குத்தி காட்டிய போதும், கோபப்படாமல் சிரித்துக் கொண்டே அதை சமாளித்தார். அதோடு கிரிக்கெட்டில் தன் மீது ஏற்பட்ட களங்கத்தை பிக்பாஸ் டைட்டில் மூலம் மாற்றி விடலாம் என்று நினைத்தார். ஆனால் கடைசியில் போட்டியில் வென்றது தீபிகா கர்கர்.
இதனால் ஸ்ரீசாந்த் ரசிகர்கள் தீபிகா காகரின் தேர்வை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு ஆன்லைட் ஓட்டுக்களை அதிகப்படுத்தி தீபிகாவை வெற்றி பெற வைத்துள்ளனர். 100 நாள் வாழ்க்கையை கடைசி நிமிட ஓட்டுக்கள் தீர்மானிக்க முடியாது என்று விமர்சிக்கிறார்கள். தீபிகாவின் டுவிட்டருக்குள் புகுந்து கடுமையாக விமர்சித்தார்கள். சிலர் எல்லை மீறி அவருக்கு கொலை மிரட்டல் கூட விடுத்தார்கள். இதானல் அவர் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியேறி விட்டார்.