Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாள் கொண்டாடிய 88 வயது ஹீரோ

07 ஜன, 2019 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Charuhaasan-celebrates-his-88th-birthday

கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சாருஹாசன். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை இயக்குனர் மகேந்திரன் தனது உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர் முழு நேர நடிகர் ஆனார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தார். தபர்ன கத என்ற கன்னடப் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.


தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்கள், மூன்று முகம், விக்ரம், ராணிதேனி, அக்னி சாட்சி, வேதம் புதிது, மீண்டும் ஒரு கோகிலா, தளபதி, வீரா உள்பட பல படங்களில் நடித்தார்.



தற்போது சாருஹாசனுக்கு 88 வயதாகிறது. இந்த வயதிலும் தாதா 87 என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு 88வது பிறந்த நாள். இதையொட்டி தாதா 87 படக்குழுவினர், அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள், சாருஹாசன் தனது மனைவியுடன் கேக் வெட்டி அதனை படக்குழுவினருக்கு ஊட்டினார். சாருஹாசன் இந்தியாவின் மூத்த ஹீரோ என்பதும், எதையும் துணிச்சலாக பேசக்கூடியவர் என்பதும், எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வேலூரில் மாப்பிள்ளை தேடிய தமன்னாவேலூரில் மாப்பிள்ளை தேடிய தமன்னா மிஷ்கின் ஏமாற்றியவருக்கு கைகொடுத்த குமரவேலன் மிஷ்கின் ஏமாற்றியவருக்கு கைகொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
09 ஜன, 2019 - 12:37 Report Abuse
Bhaskaran கமலஹாசன் அரசியலில் போனியாகமாட்டார் என்று தைரியமாக சொன்னவர் இவர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in