Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணன் படத்துக்கு தம்பி செய்த உதவி

06 ஜன, 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
mehndi-circus-hepls-his-brother-movie

குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இப்போது ஜீவாவை வைத்து 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கிவருகிறார். ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் 'மெஹந்தி சர்க்கஸ்'என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

ஹர ஹர மகாதேவகி, இருட்டுஅறையில் முரட்டுகுத்து போன்ற ஆபாசப்படங்களை தயாரித்த சூர்யாவின் உறவினரான கே.ஈ.ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் மெஹந்தி சர்க்கஸ் படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் வெளியிட்டனர். ஒரு யானையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இந்த படத்தை எடுத்திருப்பதாக தகவல் வெளியானது. அதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அமைந்திருந்தது.


இந்தப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் கதாநாயகனாக நடிக்க, ஸ்வேதா திரிபாதி கதாநாயகியாக நடிக்கிறார். மெஹந்தி சர்க்கஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டநிலையில் இப்படத்தின்' டீஸரை இன்று (6-1-19) காலை 10.35 மணிக்கு நடிகர் கார்த்தி வெளியிட்டார்.


ஷான்ரோல்டன் இசையமைக்கும், மெஹந்தி சர்க்கஸ் படத்துக்கு ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இதன் மூலம் தன் அண்ணன் படத்துக்கு கவனஈர்ப்பை தேடிக்கொடுத்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நாளில் இரண்டு தரமான படங்கள்ஒரே நாளில் இரண்டு தரமான படங்கள் படத்தின் தலைப்பாக மாறிய வீட்டின் கதவிலக்க எண் படத்தின் தலைப்பாக மாறிய வீட்டின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in