Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2019ல் நான்கு படங்களில் நடிக்கும் தனுஷ்

06 ஜன, 2019 - 13:35 IST
எழுத்தின் அளவு:
dhanush-to-act-in-4-films-in-2019

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தை அடுத்து 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தனுஷை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறது. 'விஸ்வாசம்' படம் வெளியாவதற்கு முன்னதாக புதிய படங்களின் தயாரிப்பை தொடங்க வேண்டாம் என்று அஜித் கேட்டுக்கொண்டதால் அடுத்து தயாரிக்க இருக்கும் 2 படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்'.

விஸ்வாசம் படம் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்டநிலையில் தற்போது இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க இருக்கும் இரண்டு படங்களில் ஒரு படத்தை 'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', 'கொடி' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார்.


இன்னொரு படத்தை சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ராட்சசன்' படத்தை இயககிய ராம்குமார் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கான ஒப்பந்தம் நடைபெற்ற புகைப்படத்துடன் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தினர் சமீபத்தில் வெளியிட்டனர்.


இந்த இரண்டு படங்களில் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் படம் பிப்ரவரி முதல்வாரம் தொடங்குகிறது. ராம்குமார் இயக்கும் படம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்களுக்கு இடையில் கௌதம்மேனன் இயக்கத்தில் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கும் 'அசுரன்' படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உடல்நிலை முன்னேற்றம்; அக்வாமேன் பார்த்த விஜயகாந்த்!உடல்நிலை முன்னேற்றம்; அக்வாமேன் ... ஒரே நாளில் இரண்டு தரமான படங்கள் ஒரே நாளில் இரண்டு தரமான படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in