ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றாலே தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கும். ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த '2.0' படம் தமிழை விட தெலுங்கில் தான் அதிக வசூலைப் பெற்றது. அந்தப் படத்தின் தெலுங்கு உரிமை 70 கோடி ரூபாய் என அதிக விலையாக இருந்ததால் தான் படம் பெரிய லாபத்தைத் தரவில்லை. இருப்பினும் படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டது.
அதனால், பொங்கலுக்கு வெளியாக உள்ள 'பேட்ட' படமும் தெலுங்கில் அதிக வசூலைப் பெறும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், முன்னணி நடிகர்களின் நேரடித் தெலுங்குப் படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால் 'பேட்ட' படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணா நடித்துள்ள 'என்டிஆர்' படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா', வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருகின்றன. அந்தப் படங்களுடன் 'பேட்ட' போட்டி போட்டு வசூலிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருப்பினும் 'பேட்ட' படத்தின் தெலுங்கு உரிமை வெறும் 15 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டதாக ஒரு தகவல். '2.0' படத்தை விட ஐந்து மடங்கு விலை குறைவு என்பதால் அந்தத் தொகைக்கும் மேலாக படம் வசூலித்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் தெலுங்கு உரிமையை வாங்கியவர்கள்.