Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகையாக நடிக்கும் ஓவியா!

04 ஜன, 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Oviya-acting-as-a-actress-in-a-film

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ்வும், நடிகை ஓவியாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், 'இருவருக்கும் இடையில் காதலும் இல்லை; கத்திரிக்காயும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட இளம் நண்பர்கள். அவ்வளவுதான்' என கருத்துக் கூறி, காதலுக்கு மறுப்புத் தெரிவித்தனர். ஆனாலும், இருவரும், அவ்வப்போது வெளியிடங்களிலும் சந்தித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் புதிய படமான ராஜபீமாவில், ஆரவ், நாயகனாக நடிக்க, ஆஷிமா நாயகியாக நடிக்கிறார். அதேநேரம், இப்படத்தில், நடிகை ஓவியாவும் நடிக்கிறார். முதலில், படத்தில் கவுரவத் தோற்றமாகத்தான் ஓவியா வருகிறார். ஆரவ்வுடன் சேர்ந்து, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் அவ்வளவுதான் என கூறிவந்தனர்.

இப்போது, அந்தப் படத்தில், நடிகை ஓவியாவுக்கென்று சில பிரத்யேக காட்சிகள் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 'ராஜபீமா' படத்தில் நடிகை ஓவியா, ஒரு நடிகையாகவே நடித்திருக்கிறார். அவரது தீவிர ரசிகராக இருக்கும் ஆரவ், ஓவியா நடித்து வெளியாகும் புதிய படத்தின் முதல் காட்சியை பார்க்க வருகிறார். அப்போது, படத்தில் நடித்திருக்கும் ஓவியாவே, படம் பார்க்க வருகிறார்.

அப்போது, ஓவியாவின் ரசிகராக இருக்கும் ஆரவ், தன்னை ஓவியாவின் காதலியாக நினைத்துக் கொள்கிறார். தியேட்டர் பக்கத்திலேயே இருந்தபடியே, ஓவியாவை பார்த்துவிடும் ஆரவ், அங்கிருந்தபடியே, ஓவியாவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு கனவு காண்கிறார். அப்போது, ஆரவ்வும், ஓவியாவும் நடனமாடி எதிரில் இருப்பவர்களை ரசிக்க வைக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜயகாந்த், அஜித் பெருமை பேசும் ஜோதிகாவிஜயகாந்த், அஜித் பெருமை பேசும் ... இன்னும் 5 படங்கள்? : சட்டசபை தேர்தல் தான் ரஜினி டார்க்கெட் இன்னும் 5 படங்கள்? : சட்டசபை தேர்தல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in