Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயகாந்த், அஜித் பெருமை பேசும் ஜோதிகா

04 ஜன, 2019 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Jyothika-speak-about-Ajith-and-Vijayakanth

சென்னையில் உள்ள பிரபல தனி்யார் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்தவர் உதவியில்லாமல் யாருமே இந்த உலகத்தில் வாழ முடியாது. அதற்காக, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அடுத்தவர் உதவியை சார்ந்திருக்க முடியாது. அதேநேரம், சிறிய உதவியை செய்த ஒவ்வொருவரையும் நினைத்துக் கொண்டு இருக்கவும், நன்றி சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது. ஆனால், பெரிய பெரிய உதவி செய்தவர்களே கூட, அந்தத் தகவலைக் கூட அடுத்தவருக்கும் சொல்லாமல், தெரியாமல் வைத்திருக்கும் பெருந்தன்மைக்கும், பெரிய மனதுக்கும் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். அது அவர்களுக்கான இயல்பு.

என்னப் பொறுத்த வரையில், நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் நடிகர் அஜித் ஆகிய இருவரும் தான், அடுத்தவருக்கு மிகப் பெரிய உதவியை செய்திருந்தாலும், அது குறித்து அடுத்தவரிடம் வாய்த் திறக்காமல், அமைதியாக இருந்து விடுகின்றனர். இது அவர்களின் மிகப் பெரிய தகுதி. ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு, ஐநூறு பேரிடம் சொல்லும் நபர்கள் இருக்கும் உலகில், விஜயகாந்த், அஜித் போன்றவர்களும் இருப்பது பெருமைக்குரிய விஷயம்.

இவ்வாறு ஜோதிகா பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து 5 படங்கள் : உற்சாகத்தில் ஜி.வி.பிரகாஷ்அடுத்தடுத்து 5 படங்கள் : உற்சாகத்தில் ... நடிகையாக நடிக்கும் ஓவியா! நடிகையாக நடிக்கும் ஓவியா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

karutthu - nainital,இந்தியா
06 ஜன, 2019 - 14:07 Report Abuse
karutthu எம் ஜி ஆர் அவர்களைப்பற்றியும் , அவருடைய குணாதிசயங்களைப்பற்றியும் உங்களுக்கு தெரியுமா ? ஒருவேளை உங்களுக்கு தெரியாவிட்டால் உங்கள் மாமனார் .சிவகுமார் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் .
Rate this:
Naduvar - Toronto,கனடா
05 ஜன, 2019 - 01:23 Report Abuse
Naduvar அப்புறம் மீடோவ்வ் ல போய் எழுதுவா
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
04 ஜன, 2019 - 17:32 Report Abuse
Vasudevan Srinivasan எனக்குத் தெரிந்தவரை திருமதி. ஜோதிகா அவர்கள் கேப்டனுடன் பணிபுரிந்ததில்லை ஆனாலும் அவரைப் பற்றி திரிந்தது வைத்துக்கொண்டு சரியான நேரத்தில் நினைவுகூரும் பண்பு மிகவும் பாராட்டத்தக்கது.. வாழ்த்துக்கள் மேடம்..
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
07 ஜன, 2019 - 19:21Report Abuse
Dr.C.S.Rangarajanதர்மம் தலை காக்கும் என்பதை அறியும் நேரம் நெருங்குவதை யார் யார் அறிந்து வைத்துள்ளார்கள்?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in