'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த 'மாரி 2' படம் கடந்த வருடம் டிசம்பர் 21ம் தேதி வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் பட வெளியீட்டிற்கு முன்பே சூப்பர் ஹிட்டானது.
அந்தப் பாடலின் லிரிக் வீடியோவிற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து, அந்தப்பாடல் யு-டியூபில் குறுகிய நாட்களில் 5 கோடி பார்வைகளைக் கடந்தது. நேற்று முன்தினம் மாலை அந்தப் பாடலின் முழு வீடியோ யு டியூபில் வெளியானது. அந்தப் பாடல் குறைந்த மணி நேரங்களில் 50 லட்சத்தைக் கடந்து தற்போது 1 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
37 மணி நேரங்களில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. அத்துடன் பாடலுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 'ரௌடி பேபி' பாடலின் லிரிக் வீடியோ 35 நாட்களில் 5 கோடி பார்வைகள், முழு பாடல் வீடியோ, 24 மணி நேரத்தில் 2,88,000 லைக்குகள், 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வைகள், மியூசிக்கலி ஆப்பில் 3,50,000 வீடியோக்கள் என புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ் சினிமா பாடல்களில் இவையனைத்தும் புதிய சாதனை.