Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட, விஸ்வாசம்' முந்துவது யார் ?

03 ஜன, 2019 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Petta-vs-Viswasam-:-Who-will-lead.?

2019 பொங்கலுக்கு மிகப் பெரும் போட்டியாக ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படமும், அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படமும் வெளிவர உள்ளது. இந்த இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர்காரர்களிடமும் இருக்கிறது என்று விசாரித்தால் அனைவரும் ஒட்டு மொத்தமாக 'விஸ்வாசம்' படத்தைத்தான் சொல்கிறார்கள்.

'விஸ்வாசம்' படத்திற்காக எப்போதோ ஒப்பந்தம் போட்டு பல தியேட்டர்களை புக் செய்துவிட்டார்கள். 'பேட்ட' படத்தை பின்னர்தான் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தார்கள்.

ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளிவந்தன. ஆனால், அஜித் நடித்த படம் வெளிவந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. எனவே, அஜித் படத்தைப் பார்க்கவே பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

மேலும், ப்ரீ-புக்கிங் எனப்படும் முன்பதிவுக்கு முன்பதிவில் 'விஸ்வாசம்' படத்திற்காக முன்பதிவை ஆரம்பித்த தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனிடையே, 'விஸ்வாசம்' படம் ஜனவரி 10 வரவில்லை, ஜனவரி 14 தான் வருகிறது என நேற்று ஒரு தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான ஒரு தகவல். படம் கண்டிப்பாக ஜனவரி 10ம் தேதி தான் வருகிறது என தயாரிப்பு வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பட வெளியீட்டுத் தேதியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யக் கூடாது என அஜித் தெரிவித்துள்ளதாகவும் ஒரு தகவல்.

இப்போதைய சூழலில் 'பேட்ட' படத்தை விட 'விஸ்வாசம்' படம்தான் முந்திக் கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
நாளை 2 ஹாலிவுட் படங்கள் தமிழில் வெளிவருகிறதுநாளை 2 ஹாலிவுட் படங்கள் தமிழில் ... நீச்சல் உடையில் பேட்டியளித்த சுவாதி நீச்சல் உடையில் பேட்டியளித்த சுவாதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
04 ஜன, 2019 - 17:39 Report Abuse
Vasudevan Srinivasan பேட்ட மற்றும் விசுவாசம் இரண்டு படங்களும் வெளிவருகிறது அந்தந்த படங்களுக்கான ரசிகர்கள் அந்தந்த படங்களை பார்க்கப்போகிறார்கள்..
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
04 ஜன, 2019 - 10:29 Report Abuse
Vijay வழக்கமாக அஜித் ரசிகர்கள் படம் ஊத்திகிட்டத்துக்கு அப்புறம் இது விஜய் ரசிகர்களின் தீய செயல் பொய் பிரச்சாரம் னு ஆளுவானுங்க .. இந்த முறை ரஜினி ரசிகர்களால் அஜித் படம் ஓடவில்லை , சன் நெட்ஒர்க் ஆள் படத்துக்கு நெகடிவ் ரெவியூஸ் னு சொல்லுவாங்க ...
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
04 ஜன, 2019 - 10:28 Report Abuse
Thalaivar Rasigan 7 நாட்களாக PREBOOKING சத்யம் ஓபன் செய்து விசுவாசம் 3 நாட்களின் காட்சிகள் கூட நிரம்பவில்லை. நேற்று மாலை 6 மணிக்கு பேட்ட படம் ஆரம்பித்தார்கள். 12 மணி நேரத்தில் 3 நாட்களின் காட்சிகள் நிரம்பிவிட்டது. யாருகிட்ட? ஒன்லி ஒன் - சூப்பர் ஒன்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
03 ஜன, 2019 - 23:37 Report Abuse
Mirthika Sathiamoorthi ஹ்ஹஹ்ஹா...இப்போ அப்படித்தான் சொல்லணும் ...ஆனா முந்தபோவது ரஜினிதான்...ரஜினி அரசியலில் குதிக்கபோறார்.....அஜித் அரசியலுக்கு வரபோறதில்லை..அதுமட்டுமல்ல தலை எந்த பிரச்னையிலும் தலையே கொடுக்கபோறதில்லை...கொஞ்சமா சன் தன்னோட அரசியல் அழுத்தத்தை தியேட்டர் மீது வச்ச போதும். எல்லாம் சீட்டுக்கட்டு மளிகை மாதிரி பொலபொலன்னு விழுந்திடும்...அதுமட்டுமல்ல தமிழகத்தில் அடுத்த ஆட்சியை பிடிக்கபோறது சன் குழுமம் கட்சின்னு பரவலா பேசுபடுது...இந்த சூழ்நிலையில் அஜீத்துக்காக்க இவங்களை யாராச்சும் விரோதிச்சுக்குவாங்களா? சூப்பர்ஸ்டாருக்கு எதிர் கருது சொன்னாத்தானே விளம்பரம்....கைப்புண்ணுக்கு கண்ணாடியா? தலைக்குள்ள எதுவும் இல்லாதவங்கதான் தலைன்னு பேசுவாங்க.. அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு...
Rate this:
Mahendra Babu R - Chennai,இந்தியா
03 ஜன, 2019 - 22:42 Report Abuse
Mahendra Babu R இப்போ இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in