Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து சத்யஜோதிக்கு தனுஷ் இரண்டு படம்

02 ஜன, 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Sathyayothi-films-producing-two-movies-with-Dhanush

நடிகர் அஜித் நடிக்க, சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'விஸ்வாசம்'. இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே, நடிகர் அஜித்தை வைத்து, 'விவேகம்' படத்தையும், இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது.

'விஸ்வாசம்' படம், வரும் 10ல், ரிலீசாகிறது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால், படத் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், நடிகர் தனுஷை வைத்து அடுத்தடுத்து இரு படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக, சத்யஜோதி பிலிமிஸ் நிறுவனத்தினர் நடிகர் தனுஷை அழைத்துப் பேசி, நடிக்க சம்மதம் பெற்றுள்ளனர்.

முதல் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க, 'காக்கிச் சட்டை', 'கொடி' மற்றும் 'எதிர் நீச்சல்' போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

சத்யஜோதி தயாரிக்கும் இன்னொரு படத்திலும் நடிகர் தனுஷ்தான் கதாநாயகன். ஏற்கனவே 'ராட்சசன்' படத்தை இயக்கிய ராம்குமார், அந்தப் படத்துக்கு இயக்குநராகிறார். அடுத்தடுத்து ஒரே கதாநாயகனை வைத்து ஒரே நிறுவனம் இரு படங்களைத் தயாரிப்பது குறித்து, சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'உயிர்கா' எப்படி 'காப்பான்' ஆக மாறியது?'உயிர்கா' எப்படி 'காப்பான்' ஆக ... காதலரை மணக்கிறார் எமி ஜாக்சன் ? காதலரை மணக்கிறார் எமி ஜாக்சன் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sri - trichy,இந்தியா
03 ஜன, 2019 - 09:42 Report Abuse
sri ஐயா நீங்க இரண்டு படம் இல்லை இரண்டாயிரம் படம் பண்ணனும் அதை நாங்கள் ஆயிரம் ரூபா கொடுத்து பார்க்கணும் எங்கள் வாழ்கை கு ஒரு நல்ல வழியை திரையில் காட்டுங்கள்
Rate this:
ceepee -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜன, 2019 - 13:20 Report Abuse
ceepee விஸ்வாசம் அவ்ளோ எதிர்பார்பெல்லாம் இல்லை, காசு வாங்கிட்டு நடிச்ச படமே ஓடல, இது நஷ்டத்த ஈடுகட்ட நடிக்கிற படம்தான. பாட்டு, ட்ரெய்லர், கெட்அப் எல்லாம் மொக்கயா இருக்கு. இருந்தாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in