Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாப் 10 படங்கள் : விக்னேஷ் சிவன் 'கெட்ட' கோபம்

01 ஜன, 2019 - 18:44 IST
எழுத்தின் அளவு:
TSK-:-Vignesh-shivan-angry

2018ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், டாப் 10 படங்கள் என பலரும் பல்வேறு விதமான பட்டியல்களை வெளியிட்டார்கள். அதில் பெரும்பாலும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் இடம் பெறவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம் ஹிந்தியில் வெளிவந்த 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'சொடக்கு மேல..' பாடல் டாப் 10 பாடல்களில் இடம் பெற்றாலும் படம் இடம் பெறவில்லை என்பதில் விக்னேஷ் சிவன் கோபமாக இருக்கிறார் போலிருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நயன்தாராவுடன் அமெரிக்கா சென்றிருந்தாலும் 2018ன் சிறந்த பட்டியல்களைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது.

டுவிட்டரில் கெட்ட வார்த்தையுடன் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். “......... எல்லா 2018ம் ஆண்டின் டாப் 10, டாப் 5, தவறவிட்டது, ஹிட்ஸ், வசூல், விமர்சனம், கருத்து. நாங்கள் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை ஜாலியாக உருவாக்கினோம். தியேட்டர்களில் மக்கள் கொண்டாடியதே எங்களுக்குப் போதும்,” எனக் கடும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவிற்கு சூர்யா ரசிகர்களே 'தானா சேர்ந்த கூட்டம்' அப்படி ஒன்றும் சிறந்த படம் அல்ல. ஒரு பாடலைத் தவிர படத்தில் எதுவுமே சரியில்லை, தோல்வி வந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹிருத்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்.?ஹிருத்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்.? விஸ்வாசம் கதை இதுதானா? - கசியும் தகவல் விஸ்வாசம் கதை இதுதானா? - கசியும் தகவல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

prem - manama  ( Posted via: Dinamalar Windows App )
02 ஜன, 2019 - 12:09 Report Abuse
prem correct decission by selection team.....tsk is a worst movie in surya life.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in