டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
சினிமாவில் பிரபலமான நடிகர்கள் அரசியலில் பிரவேசிப்பது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து, கர்நாடகாவை சேர்ந்தவரும், நடிகருமான பிரகாஷ்ராஜூம் களமிறங்க உள்ளார்.
பத்திரிகையாளரும், தனது நண்பருமான கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, அரசியல் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு வந்தார் பிரகாஷ் ராஜ் குறிப்பாக, பா.ஜ., மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருபவர், அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். அதேசமயம் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறி வந்தார்.
விரைவில் பார்லிமென்ட் தேர்தல் வர இருக்கும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜூம் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது :
"அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய துவக்கம், நிறைய பொறுப்புகள், உங்களின் ஆதரவுடன் வருகிற பார்லிமென்ட் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட போகிறேன். போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்திருக்கிறார்.