பெங்காலி மொழியில் வெளியாகும் கார்கி | நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு ஏ சான்றிதழ் | பாலிவுட்டில் பிஸி : மும்பையில் வீடு வாங்கினார் ராஷ்மிகா | படப்பிடிப்பில் விபத்து : ஷில்பா ஷெட்டி கால் எலும்பு முறிந்தது | நடிகர் சூர்யா மீதான வழக்கு ரத்து | இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி |
தமிழ் சினிமாவின் இசை பொக்கிஷம் இளையராஜா. 75 வயதை கடந்துவிட்ட இவர், 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். இவரை கவுரவிக்கும் விதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைராஜா என்ற பெயரில், பிப்ரவரி மாதம் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரும் பங்கேற்பதால் அன்றைய தினம் படப்பிடிப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2019 புத்தாண்டு பிறந்ததையொட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், துணை தலைவர் பார்த்திபன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இசை நிகழ்ச்சி கமிட்டி உறுப்பினர்கள், இளையராஜாவை சந்தித்தனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளையராஜா மற்றும் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். "கேக்கில், இசை (ஸ்)வரமாய் வந்தது 19 வருடம் 75 வயது" என எழுதப்பட்டு, இசை தொடர்பான குறியீடுகளும் கேக்கில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மேலும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கான பூஜையும் எளிமையான முறையில் நடந்தது.