Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2019ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஓர் பார்வை

01 ஜன, 2019 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Expected-Tamil-movies-in-2019

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், 2018ம் ஆண்டு பல்வேறு சோதனைகள், சர்ச்சைகள், பிரச்சினைகள் கடந்து சென்று, 2019 புத்தாண்டும் பிறந்துவிட்டது. புதிய ஆண்டான 2019, நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. அது தமிழ் சினிமாவிலும் ஆரம்பத்திலேயே ஒரு அச்சாரமாய் அமையப் போகிறது.

இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி கமர்ஷியல் ரீதியாக பெரிய ஓபனிங்கைத் தரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அது அடுத்தடுத்த மாதங்களிலும் தொடர்ந்தால் சிறப்புதான்.

2019ம் ஆண்டில் வெளியாக உள்ள சில படங்கள், தயாராகி வரும் சில படங்கள் இப்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. அப்படிப்பட்ட படங்கள் எவையெவை என்பதைப் பார்ப்போம்.

பேட்ட

இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் மற்றும் பலர்

2018ல் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்களான 'காலா, 2.0' ஆகிய படங்கள் வழக்கமான ரஜினி படங்களாக இல்லாமல் போனதாக ரசிகர்களிடம் ஒரு வருத்தம் உண்டு. அந்தக் குறையை 'பேட்ட' போக்கும் என்ற எதிர்பார்ப்பு டிரைலரிலேயே வெளிப்பட்டு விட்டது. ஒரு அதிரடியான முழுக்க முழுக்க ரஜினி படமாக 'பேட்ட' இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

விஸ்வாசம்

இயக்கம் - சிவா
இசை - இமான்
நடிப்பு - அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர்

'வீரம், வேதாளம், விவேகம்' படங்களுக்குப் பிறகு அஜித், சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த படம். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த போது மீண்டும் அஜித் படத்தை இயக்கும் சிவாவா என அஜித் ரசிகர்களே கொஞ்சம் கோபப்பட்டார்கள். ஆனால், படத்தின் டிரைலர் அந்தக் கோபத்தை அப்படியே மாற்றிவிட்டது. ஒரு அதிரடியான ஆக்ஷன் சென்டிமென்ட் படமாக 'விஸ்வாசம்' இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிட்டது.

வந்தா ராஜாவாதான் வருவேன்


இயக்கம் - சுந்தர் சி
இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா மற்றும் பலர்

சுந்தர் சி, சிம்பு முதல் முறையாக இணையும் படம். தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக் இது. படத்தை பொங்கலன்றே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், 'பேட்ட, விஸ்வாசம்' வெளிவருவதால் தள்ளி வைத்துவிட்டார்கள். ஜனவரிக்குள் படம் வந்துவிடலாம்.

தேவ்

இயக்கம் - ரஜத் ரவிசங்கர்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு - கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்

2018ல் அனைவருக்கும் லாபம் தந்த ஒரே படமாக கார்த்தி நடித்து வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் இருந்தது. அந்தப் படம் வெளிவரும் வரை பெரிய எதிர்பார்ப்பு என்று எதுவும் இல்லை. படம் வெளிவந்த போதும் சீரியல் என்று கிண்டலடித்தார்கள். ஆனால், பெண்களை தியேட்டர்களுக்கு வரவழைத்த படமாக இருந்தது. அந்தப் படம் போலவே 'தேவ்' படத்தின் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதுவே படத்திற்கு பிளஸ் பாயின்ட். ஜனவரிக்குள் தேவ் தியேட்டருக்கு வந்துவிடுவார்.

வர்மா

இயக்கம் - பாலா
இசை - ரதன்
நடிப்பு - துருவ், மேகா சௌத்ரி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர்

தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் இது. பாலா முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்குகிறார் என்பது ஆச்சரியம்தான். தெலுங்கு படத்தை அப்படியே காப்பி அடித்திருப்பார்களா அல்லது, பாலா அவருடைய ஸ்டைலில் படத்தை எடுத்திருப்பாரா என்பதுதான் எதிர்பார்ப்பு. பிப்ரவரி மாதம் இந்தப் படம் வெளிவர உள்ளது.

என்ஜிகே

இயக்கம் - செல்வராகவன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர்

செல்வராகவன், சூர்யா கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ள படம். ஒரு அரசியல் படமாக இந்தப் படம் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த தீபாவளிக்கே படம் வரும் என்று முதலில் சொல்லப்பட்டு, அது பொங்கலுக்கு என மாறி, அதுவும் இல்லாமல் இப்போது தமிழ்ப் புத்தாண்டை நோக்கிப் போயுள்ளது. தாமதம் ஆனாலும் தரமான படமாக செல்வராகவன் கொடுப்பார் என சூர்யா ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

எனை நோக்கி பாயும் தோட்டா

இயக்கம் - கௌதம் மேனன்
இசை - தர்புகா சிவா
நடிப்பு - தனுஷ், மேகா ஆகாஷ்

2019ம் ஆண்டிலாவது இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் முடித்து விடுவார் என்று தனுஷ் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கௌதம் மேனன் என்றாலே தாமதம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி வருகிறது. இந்தப் படத்திற்கு முன்பாக ஆரம்பித்த தனுஷ் படங்கள் கூட வெளிவந்துவிட்டன. ஆனால், இந்தப் படம் இன்னும் வரவில்லை. படம் எப்போது வெளிவரும் என்பதை சீக்கிரமே அறிவித்தால் நல்லது.

துருவ நட்சத்திரம்

இயக்கம் - கௌதம் மேனன்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு - விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர்

இப்படத்தின் டீசர் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. 1 கோடியே 79 லட்சம் பேர் அந்த டீசரை இதுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படி ஒரு வரவேற்பைப் பெற்ற படத்தை இதுவரை முடிக்காமல் மேலும் மேலும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்த படங்கள் வெளிவந்துவிட்டன. இன்னொரு படமும் வரப் போகிறது. 2019ல் இந்தப் படம் நிச்சயம் வந்துவிடும் என நம்புவோமாக.

சூப்பர் டீலக்ஸ்

இயக்கம் - தியாகராஜன் குமாரராஜா
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர்

2011ல் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆரம்பித்த இரண்டாவது படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார். அடுத்த ஆண்டில் வெளிவர உள்ள படங்களில் வித்தியாசமான படமாக இந்தப் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதை சூப்பர் டீலக்ஸ் குழு சூப்பர் ஆக நிரூபிக்கும் என எதிர்பார்க்கலாம்.

காஞ்சனா 3

இயக்கம் - ராகவா லாரன்ஸ்
இசை - தமன்
நடிப்பு - ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா மற்றும் பலர்

2011ல் வெளிவந்த 'காஞ்சனா', 2015ல் வெளிவந்த 'காஞ்சனா 2' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வரிசையில் 2019ல் வெளிவர உள்ள 'காஞ்சனா 3' படமும் பெரிய வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் புகழ் பெற்ற பிறகு ஓவியா நடிக்க ஒப்பந்தமான படம் இது. கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிவர உள்ள இந்தப் படம் மீண்டும் குட்டீஸ் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கலாம்.

வரிசை கட்டி நிற்கும் மற்ற படங்கள்


மேலே குறிப்பிட்ட படங்கள் இல்லாமல், விக்ரம் நடிக்கும் 'கடாரம் கொண்டான்', கேவி ஆனந்த் - சூர்யா படம், விஷால் நடிக்கும் 'அயோக்யா', ராஜேஷ் - சிவகார்த்திகேயன் படம், அட்லீ - விஜய் படம், வினோத் - அஜித் படம், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் 'அசுரன்', விஜய் - பிரபுதேவா கூட்டணியின் 'தேவி 2', சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியின் 'நாடோடிகள் 2' என வேறு சில படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக உள்ளன.



2019ல் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளது சிறப்பான விஷயமே. 2018ம் ஆண்டின் வெற்றி விகிதத்தை விட 2019ல் வெற்றி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்போம். பெரிய படங்கள், வசூல் படங்கள் என்பது முக்கியமல்ல, தரமான, சிறப்பான படங்கள்தான் முக்கியம். அது 2019ல் அதிகமாக வந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
2018ல் பாராட்டுகளைப் பெற்ற படங்கள்2018ல் பாராட்டுகளைப் பெற்ற படங்கள் 2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக இயக்குநர்கள் 2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
01 ஜன, 2019 - 16:21 Report Abuse
Vasudevan Srinivasan என்ன இது பாலா சார் படத்திற்கு இசைஞானி இல்லையா..?
Rate this:
R S BALA - Chennai,இந்தியா
01 ஜன, 2019 - 14:08 Report Abuse
R S BALA இந்த வருடம் சினிமா இண்டஸ்ட்ரி மட்டும் இல்ல அனைத்து துறைகளும் அதிக வெற்றிகளை எட்ட கடவுள் அருளட்டும் ... புது வருட வாழ்த்துக்கள் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in