Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று முதல் தியேட்டர் டிக்கெட் 10 ரூபாய் குறையும்

01 ஜன, 2019 - 12:30 IST
எழுத்தின் அளவு:
TN-Theatre-Ticket-will-reduce-Rs.10-from-today

சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு நாடு முழுவதும் கடந்த வருடம் ஜுலை முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. 100 ரூபாய்க்குள் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்தியாவில் உள்ள திரையுலகினர் அவர்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதனடிப்படையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்று முதல் அந்த வரி விதிப்பு குறைவு அமல்படுத்தப்படுகிறது. 100 ரூபாய்க்குக் குறைவான கட்டணங்களுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணங்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் 100 ரூபாய்க்கு மேற்பட்ட கட்டணங்களின் விலை, 10 ரூபாய் வரை குறையும். 100 ரூபாய்க்குக் குறைவான கட்டணங்களின் விலை 6 ரூபாய் வரை குறையும். ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு திரையுலகத்தினால் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இருப்பினும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்கள், பார்க்கிங் கட்டண ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கும் விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆணாதிக்க சினிமா உலகம் : ஆன்ட்ரியா ஆதங்கம்ஆணாதிக்க சினிமா உலகம் : ஆன்ட்ரியா ... திருமண வாழ்க்கை : சாய் பல்லவி ஓபன் டாக் திருமண வாழ்க்கை : சாய் பல்லவி ஓபன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01 ஜன, 2019 - 13:04 Report Abuse
Natarajan Ramanathan மக்கள் திரையரங்குகளில் படம் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in