விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலித்து வந்ததாக வேகமாக தகவல் பரவியது. ஒரு கட்டத்தில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்றெல்லாம் கூட செய்திகள் பரவின.
ஆனால், எங்கள் இருவருக்கும் இடையில் காதல் இருக்கிறது என்றோ; இல்லை என்றோ இருவரும் உறுதிபட எதையும் தெரிவித்தது கிடையாது. அதே நேரம், இருவருக்கும் இடையே இருந்த காதல், இப்போது எல்லை என்று கொஞ்ச காலத்துக்குப் பின் செய்தி பரவியது.
இந்நிலையில், நடிகர் விஷால், ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் மகள் அனிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அதற்கான நிச்சயதார்த்த விழா நடைபெறவிருக்கிறது என, நடிகர் விஷாலின் தந்தை அறிவித்தார்.
இதையடுத்து, நடிகர் விஷாலுக்குப் போட்டியாக, நடிகை வரலட்சுமியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அந்த திருமணம், விஷால் திருமணத்துக்கு முன்பாகவே நடக்கவிருக்கிறது என்று செய்தி பரவியது. இந்த செய்தி குறித்து, நடிகை விரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எப்போதும் போல, ஆண்டின் இறுதியில், வேலையில்லாத சிலர், எனக்கு திருமணம் என, வதந்தியை பரப்பி வருகின்றனர். இப்போதைக்கு, எனக்கு திருமணம் இல்லை; சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். நான் என்னுடைய நடிப்பு வேலையில் தீவிரமாக இருக்கிறேன். அன்பான தோல்வியாளர்களே, மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இவ்வாறு வரலட்சுமி கூறியுள்ளார்.