‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
சித்தார்த், அவள் என்ற திகில் படத்தை, தயாரித்து நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் திகில் படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு அருவம். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்குகிறர்.
கேத்ரின் தெரசா ஹீரோயின். இவர்கள் தவிர கபிர் துகன் சிங், மதுசூதனராவ், சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார், என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி இயக்குனர் சாய்சேகர் கூறியிருப்பதாவது:
அருவம் என்ற தலைப்பே, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்ப வைக்கும் ஒரு விஷயத்தை படம் பேசுகிறது. இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும். குறிப்பாக சித்தார்த் போன்ற இந்திய அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் இந்த படத்தில் இருந்தது கூடுதல் பொறுப்புகளை சேர்த்திருக்கிறது. என்கிறார் சாய்சேகர்.