கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன், புரட்சிக்காரன், காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வேலுபிரபாகரன், 20 வருடங்களுக்கு முன்பு இயக்கிய படம் கடவுள். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இதில், ஆர்.ஆர்.தமிழ் செல்வன் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். அவர்தான் படத்தின் தயாரிப்பாளர். அவருடன் ஸ்வாதி, இமான் அண்ணாச்சி, சீதா உள்பட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதுகுறித்து வேலு பிரபாகரன் கூறியதாவது:
ஒவ்வொரு காலகட்டத்திலும் கடவுள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. கிருஷ்ணன், ராமர், இயேசு, முகமது என அவ்வவ்போது கடவுள்களும், கடவுளின் தூதர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த 2 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு யாரும் வரவில்லை. இன்றைய காலகட்டத்தில் கடவுள் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. கடவுள் ஒரு சினிமா இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். அந்த சினிமா இயக்குனராக நானே நடிக்கிறேன் இன்றைய சமூகம் எப்படி வாழ்கிறது. எப்படி வாழ வேண்டும் என்பதுதான் படம் சொல்லும் செய்தி என்றார் வேலுபிரபாகரன்.