நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'விஸ்வாசம்' டிரைலர் நேற்று(டிச.,30, ஞாயிறு) மதியம் 1.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு வெளிவந்த டிரைலர்களின் சாதனையை இந்த டிரைலர் முறியடித்தது. சுமார் 7 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள், 9 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது.
அதன்பின் டிரைலருக்கான பார்வையும், லைக்குகளும் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்டு 1 லட்சம் லைக்குளும், கடந்த 19 மணி நேரத்தில் 38 லட்சம் பார்வைகளும்தான் கூடுதலாகக் கிடைத்துள்ளது. தற்போது(மாலை 6 மணி) 11 லட்சம் லைக்குகள், 1 கோடியே 38 லட்சம் பார்வைகள், 93 ஆயிரம் கமெண்ட்டுகளுடன் இருக்கிறது.
'சர்கார்' படத்திற்கு டிரைலர் வெளியாகவில்லை, ஆனால் டீசர் வெளியாகியது. அதனுடன் ஒப்பிடுகையில் 'சர்கார்' டீசர் 24 மணி நேரத்தில் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளைப் பெற்றது. 12 லட்சம் லைக்குகளையும், 1 லட்சம் கமெண்ட்டுகளையும் பெற்றது.
24 மணி நேரத்தில் சாதனை புரிந்த தமிழ் சினிமா டீசர்/டிரைலர் சாதனையில் இன்னமும் 'சர்கார்' தான் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'விஸ்வாசம்' டிரைலரால் முறியடிக்க முடியவில்லை.
'விஸ்வாசம்' டிரைலர் 'சர்கார்' சாதனையை சாதாரணமாக முறியடித்துவிடும் என்று நினைத்து அஜித் ரசிகர்களின் நம்பிக்கை பொய்யாகிப் போனது. இருப்பினும் 'விஸ்வாசம்' டிரைலர் தொடர்ந்து யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமே ஒரு ஆறுதல். அதுவும் நாளைக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதேசமயம், விஸ்வாசம், சமீபத்தில் வெளியான பேட்ட டிரைலரின் சாதனையை முறியடித்தது. 24மணிநேரத்தில் பேட்ட டிரைலர் 1.10 கோடி பார்வைகளும், 5 லட்சம் லைக்குகளையும் கடந்தது. தற்போது வரை நான்கு நாட்கள் கடந்த நிலையில் அந்த டிரைலருக்கு 1.54 கோடி பார்வைகளும், 6.40 லைக்குகளும் கிடைத்தன. இந்த சாதனையை விஸ்வாசம் இரண்டு நாட்களுக்குள் முறியடித்திருக்கிறது.