டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் விஷ்ணு விஷால். அந்தப் படம் வசுலை அள்ளிக் குவித்தது.
அதைத் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி', 'வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன்' உள்ளிட்ட பல படங்களிலும், கதாநாயகனாவே நடித்தார் விஷ்ணு விஷால். ஆனாலும், அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படங்களும் இல்லை; இருந்த படங்களும் பெரிய அளவில் போகவில்லை. இதனால், ரொம்பவே விரக்தியில் இருந்தார் விஷ்ணு விஷால்.
அதன்பின், சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' படம் பெரும் வெற்றி பெற்ற பின், 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் நடித்து, அந்தப் படமும் சுமாரான வெற்றியை பெற்றுள்ளது. இதனால் அவரை வெற்றி ஹீரோ என்ற அந்தஸ்தில், சினிமா தயாரிப்பாளர்கள் பார்க்கின்றனர். அதனால், இனி அவ்வப்போது தொடர்ந்து காமெடி கலந்த படங்களில் நடிக்கவும் முடிவு எடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.