டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ். நல்ல நடிகர் என பெயர் எடுத்திருந்தாலும், பெரிய பட வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் செலக்ட்டிவ்வான படங்களாக நடித்து வருகிறார். 2003லிருந்து தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்தாலும், சக்தி சவுந்தர்ராஜன் என்பவரது இயக்கத்தில் 2014ல் எடுக்கப்பட்ட 'நாய்கள் ஜாக்கிரதை' படம் தான், சிபி ராஜுக்கு மிகப் பெரிய பெயரை ஈட்டித் தந்தது.
அதன் பின், அவர் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. தற்போது ரங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் சக்தி சவுந்தர்ராஜனோடு கைகோர்க்கிறார். இப்படத்தை சத்யராஜ் தயாரிக்க இருக்கிறார். 'நாய்கள் ஜாக்கிரதை' படம் போல, பேசக் கூடிய ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிப்பதாக படக் குழு தெரிவிக்கிறது.