ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ரெஜினா. கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானார். சில தமிழ் படங்களில் நடித்த நிலையில் இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு மளமளவென உயர்ந்து முன்னணி நடிகை ஆனார். அவரது தாராள கவர்ச்சியும் அவரது வளர்ச்சிக்கு காரணம். மீண்டும் தமிழுக்கு திரும்பி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் படங்களில் நடித்தார்.
ரெஜினா ஏக் லட்கி கோ தேகா தோ அய்ஸா லகா என்ற பாலிவுட் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதனை ரெஜினா மறுக்கவில்லை. வெளிப்படையாகவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் ரெஜினா லெஸ்பியின் கேரக்டரில் நடித்திருப்பது தெரியவந்தது.
இந்தப் படத்தில் ரெஜினாவின் லெஸ்பியன் தோழியாக அனில் கபூரின் மகள் சோனம் கபூர் நடித்துள்ளார். அனில் கபூர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சோனம் கபூர் தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லெஸ்பியியன் உணர்வுக்கு ஆட்பட்ட மகளை ஒரு தந்தை எப்படி அதிலிருந்து மீட்கிறார் என்பது தான் கதையாம்.