மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்தார் சிம்பு. அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார் சிம்பு.
இயக்குநர் சுந்தர் சி உருவாக்கும் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. அந்தப் படம் விரைவில் முடிவடைந்து, திரைக்கு வர இருக்கும் சூழ்நிலையில், வெங்கட் பிரபு படமான 'மாநாடு' படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார்.
காமெடியுடன் கூடிய அரசியல் ஆக்ஷன் படமான 'மாநாடு' படத்தில், நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிகர் அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில், நடிகர் சிம்புவை நேரடியாக எதிர்க்கும் வில்லன் ரோலில் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல்.