‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சால்ட், தி டூரிஸ்ட், குங்பூ பேண்டா, அன்புரோக்கன், மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித் உள்பட பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஏஞ்சலினா ஜூலி. உலகில் அதிகம் சம்பளம் பெறும் நடிகை. தற்போது ஏஞ்சலினா அரசியலில் குதிக்கப்போவதாக கூறியிருக்கிறார். பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
நான் எங்கு தேவைப்படுகிறோனோ, அங்கு செல்வேன் என்பதை எப்போதும் கூறுவேன். அதே நேரத்தில் நான் அரசியலுக்கு ஏற்ற நபரா என்பது எனக்கு தெரியாது. உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தோன்றுகிற ஒன்றை நான் நேர்மையுடன் செய்வேன்.
இப்போதைக்கு ஐ.நா. முகமைக்காக, மக்களுக்காக நேரடியாக பணியாற்ற என்னால் முடிகிறது. நான் அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற முடியும். நான் ராணுவத்துடனும் இணைந்து செயல்பட முடியும். என்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேள்விக்கு. என் வாழ்வில் எதுவும் நடக்கும். நன்றி. என்று கூறியுள்ளார்.