பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி நடித்த பேட்ட படம் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது. த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் புரமோசன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்லாது வெளி நாட்டிலும் பேட்டயை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். பேட்ட படத்தின் வெளிநாட்டு உரிமத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ், இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.