'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2018ம் வருடத்தின் கடைசி அதிரடி டிரைலராக ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் அந்த டிரைலர் 1 கோடியே 10 லட்சம் பார்வைகளையும், 5 லட்சம் லைக்குகளையும் கடந்துள்ளது. இந்த சாதனை 'சர்கார்' டீசர் 24 மணி நேரத்தில் புரிந்த சாதனையை விட குறைவுதான்.
இருப்பினும், ரஜினிகாந்த் நடித்து 500 கோடி ரூபாய் செலவில் வெளிவந்த '2.0' பட டிரைலரின் சாதனையை 'பேட்ட' டிரைலர் முறியடித்துள்ளது. '2.0' டிரைலர் 24 மணி நேரத்தில் 80 லட்சம் பார்வைகளையும், 3 லட்சத்து 70 லட்சம் லைக்குகளையும் பெற்றது. அந்த சாதனையை 'பேட்ட' டிரைலர் முறியடித்துவிட்டது.
'பேட்ட' டிரைலரின் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், அஜித் ரசிகர்கள் 'விஸ்வாசம்' படத்தின் டீசருக்கோ, டிரைலருக்கோ காத்துக் கொண்டிருக்கிறார்கள். 'விஸ்வாசம்' படம் வெளிவர இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் படத்திற்கான டீசர் வராது, டிரைலர்தான் வெளிவரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று 'விஸ்வாசம்' டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இதுவரை வெளிவந்த டிரைலர்களின் சாதனைகளை அந்தப் படம் முறியடிக்கும் என்றே தோன்றுகிறது. அப்போது 'பேட்ட' டிரைலரின் சாதனையும் சேர்த்து முறியடிக்கப்பட்டுவிடும்.