ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஆக்சன் ஹீரோ பைஜூ. இந்த படத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆக்சன், காமெடி இரண்டும் கலந்த ஒரு புதுமாதிரியான போலீஸ் படமாக இது உருவாகி இருந்தது. இந்த படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கனை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
அதன்பின் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, ரன்வீர் சிங்கும் நடித்துள்ள 'சிம்பா' படத்தை இயக்கி, இந்த வாரம் ரிலீஸ் செய்துள்ளார் ரோஹித் ஷெட்டி. இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் கெஸ்ட் ரோலில் சூரியவன்ஷி என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் அக்சய் குமார் நடித்துள்ளார்.
இந்த சூரியவன்ஷி கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான், அடுத்ததாக ஆக்சன் ஹீரோ பைஜூ படத்தை அக்சய் குமாரை வைத்தே, இந்தியில் ரீமேக் செய்ய ரோஹித் ஷெட்டி திட்டமிட்டுள்ளார். இதற்கு சூரியவன்ஷி என டைட்டில் வைக்கவும் எண்ணியுள்ளார்.