'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நகர்புறம் சார்ந்து மனிதன் - மிருகம் இடையே இருக்கும் முரண்பாடுகளை வைத்து கதையொன்று பின்னப்பட்டு எடுக்கப்பட்டு வரும் படம் ராஜபீமா. இந்தப் படத்துக்கு சைமன் இசையமைத்திருக்கிறார். அதைவிட இண்ட்ரஸ்டிங்கான செய்தி - இந்தப் படத்தில் நடிகர் ஆரவ்வும், ஓவியாவும் நடித்துள்ளனர். ஓவியாவுக்கு பெரிய அளவிலான கேரக்டர் இல்லை என்றாலும், ஒரு பாடலுக்கு குத்து நடனமாடியுள்ளார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், இந்தப் படத்தில் தன் குரலில் ஒரு பாடலை பாடி பதிவு செய்து, தன்னை அடுத்த அவதாரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் நடிகர் ஆரவ். ராஜபீமா படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் சூழலில், படத்தில், நடிகர் ஆரவ் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என இசையமைப்பாளர் சைமன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.