'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இவரும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி இருக்கிறார். ஏற்கனவே 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்து பாராட்டப்பட்டார். அடுத்தடுத்தும், படங்களில் நடிக்க அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தும், அவர் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை.
தற்போது, நடிகை த்ரிஷாவுடன் 'பரமபத விளையாட்டு' படத்தில் இணைந்து நடித்து வருகிறார் மானஸ்வி. இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு விட்டன. இந்தப் படத்தில் மானஸ்விக்கும் வெயிட்டான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது. படம் வெளியானால், மானஸ்விக்கு நிறைய பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.