என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
நடிகர் சிம்பு, இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் அரசியல் படம் 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, இயக்குநரும். நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. அரசியல் களத்தை மையமாக வைத்து எடுக்கத் திட்டமிட்டிருக்கும் புதிய திரைப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
தற்போது வரை தீவிர அரசியலில் இருக்கும் இயக்குநர் சீமான், சமீப காலமாக சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். 'தவம்' என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தில் தான் சிம்பு நடிக்கவிருக்கிறார். மருத்துவராக வேடம் ஏற்று நடிக்கும் சிம்புவின் அந்தப் புதிய படம் சமூக விஷயங்களை மையமாக அமைக்கப்பட்டிருக்கும் கதை என படக் குழு தெரிவிக்கின்றது.